Astrology

இந்த மாதம் எந்த ராசிக்காரருக்கு என்ன நன்மை? பங்குனி மாத ராசிபலன்! (துலாம் முதல் மீனம் வரை ) #Astrology

( முதல் ஆறு ராசிகளுக்கான பலன்கள்  ) 

துலாம்:

துலாம்ராசி அன்பர்களே! தெய்வ அனுக்கிரகம் நிறைந்த மாதம். பல வகைகளிலும் வளர்ச்சி காணலாம். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு மறைந்து, அந்நியோன்யம் ஏற்படும்.  வெளிவட் டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வீட்டுத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். தந்தையுடன் இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும். உங்கள் முயற்சிக்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வராது என்று நினைத்த பணம் கைக்கு வரும். 

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். இதுவரை இருந்த பணிச்சுமை குறையும். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றத்துடன் கூடிய பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளதால், தற்காலிகமாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரிடும். 

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். ஆனால், புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் குறுக்கிடும். மாதப் பிற்பகுதிக்கு மேல், பிரபல நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வதால், வீண் விமர்சனங்களைத் தவிர்க்கலாம். 

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கடினமாக உழைத்துப் படித்து, தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள். ஆசிரியர்கள் உங்கள் வெற்றிக்குத் துணைநிற்பார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான மாதம். குடும்ப உறுப்பினர்களின் நன்மைக்காகப் பாடுபடுவீர்கள். சுபநிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

சாதகமான நாள்கள்: மார்ச் 18, 19, 20, 21,  27, 28; ஏப்ரல்2, 3, 7, 8

சந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 22, 23

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

பரிகாரம்: வெள்ளியன்று மகாலட்சுமி தாயாருக்கு நெய்தீபம் ஏற்றி தாமரை  மலர்களால் அர்ச்சனை செய்தால், சுபகாரியத் தடைகள் விலகும்.

விருச்சிகம்:

விருச்சிகராசி அன்பர்களே! பணவசதி திருப்திகரமாக இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீண்டநாள்களாகச் செல்லவேண்டுமென்று நினைத்திருந்த வெளிமாநில புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். முக்கிய விஷயங்களில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. உங்கள் முயற்சிகளுக்கு நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். உறவினர் வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், கூடுமானவரை பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.  

அலுவலகத்தில் உங்கள் திறமைக்கும் உழைப்புக்கும் அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். மாதப் பிற்பகுதியில் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் வேலைகளை  மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம்.

வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். போட்டிகளைச் சமாளிக்கக் கடுமையாக உழைக்கவேண்டி வரும். பங்குதாரர்களுடன் சுமுகமான நிலையே காணப்படும். உங்கள் முயற்சிகளுக்கு பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் கனிவான அணுகுமுறை அவசியம். சிலருக்கு வியாபாரத்தின் பொருட்டு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

கலைஞர்களுக்கு பிரபல நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். ஆனால், கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மூத்த கலைஞர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்தால்தான் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். கணவர் வீட்டாருடன் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு தற்காலிக இடமாற்றம் ஏற்படக்கூடும்.

சாதகமான நாள்கள்: மார்ச் 20, 21, 22, 23, 28, 29, 30, 31; ஏப்ரல் 1, 4, 5, 6, 9, 10

சந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 24, 25

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

பரிகாரம்: வெள்ளியன்று துர்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதுடன், சுவாதியன்று மாலை நரசிம்மர் வழிபாடு செய்வது நலம் சேர்க்கும்.

தனுசு:

தனுசுராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். வெளியூர், வெளிமாநிலப் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையில் இருந்த கருத்துவேறுபாடு மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறும் வாய்ப்பு உருவாகும். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு வீடு, மனை வாங்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். உங்கள் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு தருவார்கள். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த நெருக்கடியான சூழ்நிலை இனி மாறும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆனால், சக பணியாளர்களின் சொந்த விஷயங்களில் தலையிடவேண்டாம்.

வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். லைசென்ஸ் போன்ற விஷயங்கள் முடிவதில் தடைகள் ஏற்படக்கூடும். அரசாங்க வகையில் சில இடையூறுகள் ஏற்படலாம். பணியாளர்களிடமும் பங்குதாரர்களிடமும் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. மாதப் பிற்பகுதியில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கி, வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

கலைஞர்களுக்கு புகழ்பெற்ற நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். பொது நிகழ்ச்சிகளில் பாராட்டு கிடைக்கும். புகழ் கூடும். சக கலைஞர்கள் உங்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

மாணவர்களுக்கு முன்னேற்றமான மாதம். ஆர்வத்துடன் படித்து, தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். போட்டி, பந்தயங்களில் பாராட்டும் பரிசும் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சிறப்பான மாதம். குடும்பத்தில் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சிலருக்கு பிரசித்திப் பெற்ற ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வேலைகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். சக ஊழியர்கள் விஷயத்தில் தலையிடவேண்டாம்.

சாதகமான நாள்கள்: மார்ச் 15, 16,  22, 23, 24, 25, 30, 31; ஏப்ரல் 1, 2, 3, 7,  11, 12, 13

சந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 26, 27

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3

பரிகாரம்: ராகு காலத்தில் துர்கை வழிபாடும், அஷ்டமி நாளில் பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் நன்மை தரும், 

மகரம்:

மகரராசி அன்பர்களே! தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். பணவரவு திருப்தி தரும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர் களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, உரிய சிகிச்சையினால் உடன் நிவாரணம் கிடைத்து விடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு பெண்கள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கைத்துணை உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார். சிலருக்கு எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்பட்டு விலகும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படக்கூடும். தேவையற்ற செலவுகளும் வீண் அலைச்சலும் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் உற்சாகமான  சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் பணிகளில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சக வியாபாரிகளால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரம் சார்ந்த அமைப்புகளில் கௌரவப் பொறுப்புகள் வந்து சேரும். புதிய வியாபார முயற்சி வெற்றிகரமாக முடியும். வியாபாரம் தொடர்பான பயணம் ஆதாயம் தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சி சாதகமாக முடியும்.

கலைஞர்களுக்கு உற்சாகமான மாதம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சக கலைஞர்களால் மதிக்கப்படுவீர்கள். விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். 

மாணவர்கள் கடினமாக உழைத்துப் படித்தால்தான், தேர்வுகளைச் சிறப்பாக எழுதி நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உங்கள் விருப்பத்தை கணவர் நிறைவேற்றுவார். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

சாதகமான நாள்கள்: மார்ச் 18, 19, 24, 25,  27; ஏப்ரல் 2, 3, 4, 5, 6, 9, 10

சந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 28, 29

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

பரிகாரம்: முருகன் கோயிலில் நெய் தீபம் ஏற்றுவதும், பிரதோஷத்தன்று நந்திக்கு அபிஷேகம் செய்வதும் நன்மை தரும்.

கும்பம்:

கும்பராசி அன்பர்களே! நன்மைகள் அதிகரிக்கும் மாதம். முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் அடுத்தடுத்து நிறைவேறும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதர வாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தினருடன் விருந்து, விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பழுதான வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்குவீர்கள்.

அலுவலகத்தில், முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பார்த்து தடைப்பட்ட சலுகைகள் கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டுகள் உங்களை உற்சாகப்படுத்தும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பார்கள்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தத்  தேவையான வங்கிக் கடனுதவி கிடைக்கும். சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்பட்டு விலகும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். பிரபல நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். சக கலைஞர்கள் உங்கள் திறமையை வியந்து பாராட்டுவார்கள். பொது நிகழ்ச்சிகளில் பாராட்டப்படுவீர்கள்.

மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்தால்தான் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறமுடியும். ஆசிரியர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். குடும்பத்தினர் உங்களிடம் ஆலோசனை கேட்டுச் செயல்படுவார்கள். செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணம் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். 

சாதகமான நாள்கள்: மார்ச் 1, 16,  20, 21,  27, 28, 29; ஏப்ரல் 4, 5, 6, 7, 8, 11, 12

சந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 30, 31

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3

பரிகாரம்: தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதுடன், வியாழனன்று தட்சிணாமுர்த்தி வழிபாடும், சஷ்டியன்று முருகனுக்கு அர்ச்சனையும் செய்வது நலம் சேர்க்கும்.

மீனம்:

மீனராசி அன்பர்களே! அனைத்து முயற்சிகளும் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சுபநிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். பணவரவு திருப்தி தரும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையில் கருத்துவேறுபாடுகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சகோதர வகையில் அனுகூலமான பலன்களை எதிர்பார்க் கலாம். குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் வகையில் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், கூடுமானவரை பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையக் கூடும். 

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமை அவசியம். 

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் படிப்படியாகத்தான் கிடைக்கும். வியாபாரத்தின் காரணமாக திடீர்ப் பயணங்களும் அதனால் அலைச்சலும் உண்டாகும். சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகளைச் சந்திக்க நேரிடும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சக கலைஞர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். பாராட்டுகளுடன் விருதுகளும் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்டவேண்டும். அப்போதுதான் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறமுடியும். ஆசிரியர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் மாதம். குடும்பத்தினர் மத்தியில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் ஒவ்வொன்றாகக் கிடைக்கும்.

சாதகமான நாள்கள்: மார்ச் 18, 19, 22, 23, 28, 29, 30, 31; ஏப்ரல் 1, 7,  9, 10

சந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 2, 3

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், திங்கள்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்வதும் நன்மைகளை அருளும்.