gadgets

அனிருத், சிவகார்த்திகேயன்,அஸ்வின், ஜடேஜா... 4 பேருக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா? #TodayTrends

TodayTrends

#PrideOfTamilnadu

சென்னை ட்ரெண்டுல திடீர்னு ஒரு சர்ப்ரைஸ். ப்ரைட் ஆஃப் தமிழ்நாடுனு ஒரு ட்ரெண்ட். காரணம் நேற்று நடந்த ஒரு விருது வழங்கும் விழாவுல சிவகார்த்திகேயனும், அனிருத்தும் தமிழ்நாட்டின் பெருமைகள்னு  விருது வழங்கி இருக்காங்க, தமிழ்நாட்டின் அடையாளங்களை தேர்ந்தெடுத்து வழங்கும் ப்ரைடு ஆஃப் தமிழ்நாடு அமைப்பால் நேற்று இந்த விழா நடத்தப்பட்டது. தமிழ் பாரம்பர்யத்துடன் வேட்டி அணிந்து வந்திருந்த சிவா-அனிருத் கூட்டனி தான் இன்றைய ட்ரெண்டிங் ஆஃப் தமிழ்நாடு

#Ashwin&Jadeja

இந்தியா - ஆஸ்திரேலியா மேட்ச் மார்ஷ், ஹாண்ட்ஸ்கோம் ஆட்டத்துனால ட்ரா ஆகிடுச்சு. ஆனா இந்தியா நிகழ்த்திய சாதனைகள் அளவே இல்லாம போய்ட்டு இருக்கு. நேத்திக்கு புஜாரா ஒரே இன்னிங்ஸ்ல அதிக பந்துகளை சந்தித்த வீரர்ங்குற சாதனையை ட்ராவிட்டுட்ட இருந்து பறிக்க, இன்னிக்கு அஷ்வினும் ஜடேஜாவும், கும்ப்ளேட்ட இருந்து ஒரு சீஸன்ல(2016-17) அதிக ஓவர் வீசிய வீரர்ன்ற சாதனையை கேட்ச் பண்ணிட்டாங்க. 1250 ஓவருக்கு மேல,  கிட்டத்தட்ட 8000 பந்துகளை வீசி 150க்கும் அதிகமான விக்கெட் வீழ்த்திருக்காங்க. இந்த சீசன்ல இந்தியா வீழ்த்துன விக்கெடுகள்ல 70 சதவிகிதம் அஸ்வின், ஜடேஜா தானாம். உண்மையாலுமே நீங்க தான் ப்ரைட் ஆஃப் இந்தியா ப்ரோ.

#Outono

ஐரோப்பாவில் இலையுதிர்காலம் துவங்கி விட்டது. அதனை வரவேற்கும் விதமாக சர்வதேச ட்ரெண்டில் Outono இடம்பெற்றது.  பார்க் பென்ச்சுகளில் உதிர்ந்த இலைகளுடன் ஃபோட்டோக்கள் இணையத்தை கலக்கின. காதலர்களின் க்ளிக்கில் கவிதையாய் அறிமுகமாகியுள்ளது Outono. ஐரோப்பாவில் இதனை வேற லெவலில்  கொண்டாடுவதால் ட்ரிப் அடிப்பவர்களின் பார்வையும் ஐரோப்பாவை மையம் கொண்டுள்ளது.

#InternationalDayOfHappiness

கபாலி படத்துல சூப்பர் ஸ்டார் பன்ச்க்கு ஒரு டே கொண்டாடினா எப்படி இருக்கும், செம கெத்தா, ஸ்டைலா இருக்கும்ல, ஆமா பாஸ் இன்னிக்கு #InternationalDayOfHappiness அப்படின்னா உலக மகிழ்ச்சி தினம். அன்பை பரிமாறனும், அனைவரும் மகிழ்ச்சியா இருக்கணும்னு கொண்டாடப்படும் இந்நாள் உலக ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. அப்புறம் என்ன கெத்தா சொல்லுவோம்... மகிழ்ச்சி

காற்று வெளியிடை!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடிக்க காதலாகி காதலிலே உருவாகி வரும் படம் ‘காற்று வெளியிடை’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒவ்வொரு பாடலுமே செம ஹிட். ‘காற்றுவெளியிடை’ படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் - வைரமுத்து கூட்டணியில் ரோஜாவில் தொடங்கிய பயணத்திற்கு இது 25-வது ஆண்டு ஆகிடுச்சு. 

”இந்தப் படம் போர்க்கதை கிடையாது. முழுக்க முழுக்க காதல் கதை தான். எத்தனை ஆண்டு கழிச்சிப் பார்த்தாலும் மணிசார் படம் எப்போதுமே ட்ரெண்டா தான் இருக்கும். ‘ஆயுத எழுத்து’ தியேட்டர்ல படம் முடிஞ்சு என்டு கார்டு போடும்போது, 20 பேரை நிக்கவச்சு என் பேர் வரும்போது காட்டியிருக்கேன். நான் இப்போதும் எப்போதுமே மணி சாரோட அசிஸ்டெண்ட் டைரக்டர் தான்னு” கார்த்தி நெகிழ...சாரட்டு வண்டில தெறிக்க விட்டது காற்று வெளியிடை

இதே மாதிரி உங்களுக்கு தெரிஞ்ச மாஸ் ட்ரெண்டிங் விஷயங்கள கமென்ட் பண்ணுங்க பாஸ்...

- ட்ரெண்ட்பெர்க்