`நம்ம சிறகுகளான' பைக்குகளைப் பராமரிப்பது எப்படி? 10 முக்கியமான டிப்ஸ்! | Photo Story

பிரபாகரன் சண்முகநாதன்

கல்லூரி படிக்கிற வயது வரும் போது இரண்டு விதமான காதல் தோன்றும். ஒன்று பருவக் காதல். இன்னொன்று பைக் காதல். அப்படி அடிச்சுப் பிடிச்சு வாங்குகிற பைக்கை எப்படிப் பராமரிப்பது எனப் பார்ப்போம்.

பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது, ‛டர்புர்’ என ஆக்ஸிலரேட்டர் முறுக்கத் தேவையில்லை. இப்போது வரும் BS-6 பைக்குகளில் எல்லாமே சாஃப்ட் டச் எலெக்ட்ரிக் ஸ்டார்ட்தான். சாஃப்டா கையாளுங்க.

சிக்னலில் 50 விநாடிகள் தாண்டி நிற்க வேண்டியிருக்கும் என்று தெரிந்தால்… இன்ஜினை ஆஃப் செய்துவிடுவதுதான் நல்லது. அதற்காக, குறைந்தபட்ச விநாடிகளுக்கு ஆஃப் செய்வதும் வேண்டாம்.

கியர் போடுவதிலும் எரிபொருள் சிக்கனம் அடங்கியிருக்கிறது. குறைவான வேகத்திலேயே சட்டென கியர் அப்ஷிஃப்ட் செய்வதும், அதிகமான வேகத்தில் டவுன்ஷிஃப்ட் செய்வதும் தவறு.

‘ட்யூப்லெஸ் டயர்தானே… காத்து நாளைக்கு அடிச்சுக்கலாம்’ என்று தள்ளிப் போடாதீர்கள். சரியான காற்று அளவு கொண்ட டயர்கள், மைலேஜுக்கு அமைதியான நண்பர்கள்.

மண் மற்றும் தூசு படிந்த செயின்கள், வீல்களைச் சுற்றுவதற்கு இன்ஜின் பவரைத்தான் படுத்தி எடுக்கும். எனவே, வாரத்துக்கு ஒருமுறை செயினுக்கு கியர் ஆயில் அல்லது லூப்ரிகன்ட் அடித்து பக்காவாக வைத்துக் கொள்ளுங்கள்.

சிக்னலில்கூட க்ளட்ச்சை விடாமல் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டே இருப்பது தவறு. க்ளட்ச்சைப் பிடித்துக் கொண்டே ஆக்ஸிலரேட்டர் முறுக்குவதும் கூடாது. கியர் மாற்றும்போது மட்டும்தான் க்ளட்ச் ஞாபகம் வரணும்.

எப்போதுமே பைக்கை சென்டர் ஸ்டாண்ட் போட்டே பழகுங்கள். சைடு ஸ்டாண்ட் போட்டு நீண்ட நாட்கள் பைக்கை நிறுத்தினால் பேட்டரி டிரெய்ன் ஆகும் வாய்ப்பு அதிகம்.

ரொம்ப நாட்களாக வண்டி எடுக்கப் போவதில்லை என்றால் பெட்ரோலை டிரெயின் செய்துவிடவும். இல்லையெனில், பெட்ரோல் ஜெல்லி மாதிரி இறுகிப் போய் விடும்.

சடர்ன் பிரேக்கிங், திடும் ஆக்ஸிலரேஷன் இவையும் வேண்டாம். கிராஜுவலான வேகத்தில் போவதுதான் மைலேஜுக்கும் வண்டிக்கும் நமக்கும் நல்லது. ஃசேபா டிரைவ் பண்ணுங்க நண்பா!