குறைந்த பட்ஜெட்; அதிக வேகம்; 160 கிமீ வேகத்தில் பறக்கும் டாப் 5 பைக்குகள் | Photo Story

பிரபாகரன் சண்முகநாதன்

குறைந்த பட்ஜெட்டில் 160 கிமீ வேகத்தை அடையும் டாப்-5 பைக்குகளைப் பற்றிப் பார்ப்போம்.

பஜாஜ் டொமினார் 400 (2.59 லட்சம்*) ராயல் என்ஃபீல்டின் க்ளாஸிக்குக்குப் போட்டியாக இந்த பவர் க்ரூஸர், நெடுஞ்சாலையில் 165kmph வேகத்தை அடைகிறது. BS-6 மாடலில் புதிய அம்சங்கள் இணைந்திருக்கின்றன.

டிவிஎஸ் அப்பாச்சி RR 310 (2.99 லட்சம்*) ஜெர்மனியின் BMW உடன் கூட்டணி வைத்து உருவாக்கப்பட்ட 312 cc இன்ஜின் கொண்ட பைக்தான் அப்பாச்சி RR 310.

KTM RC 390 ஜென் 1 (3.28 லட்சம்*) 2014 - ல் அறிமுகப்படுத்தப்பட்ட KTM RC390 தான், இந்த லிஸ்ட்டில் மிகவும் பழைய பைக். இதன் 373 சிசி இன்ஜின் 169 கிமீ டாப் ஸ்பீடை அடைவதால், இன்றளவும் RC-க்கு எனத் தனி ரசிகர் பட்டாளம் உண்டு

KTM டியூக் 390 (3.38 லட்சம்*) விலை சற்றே அதிகமாக இருந்தாலும், இந்த லிஸ்ட்டில் எடை குறைந்த பைக் டியூக் 390 தான். 44bhp இன்ஜின், 167 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 (3.36 லட்சம்*) இந்த லிஸ்ட்டில் ட்வின் சிலிண்டர் இன்ஜினைக் கொண்டிருக்கும் ஒரே பைக்கான ராயல் என்ஃபீல்டின் இன்டர்செப்டர் 650 தான், இந்தியாவின் விலை குறைவான ட்வின் சிலிண்டர் பைக்.

இந்த பைக்குகளில் உங்கள் பேவரைட் எது என்பதை கமென்டில் சொல்லுங்க.