``இவ்வளவு வேகம் பைக் போகுமா''- உலகின் அதிவேகமான டாப் 10 பைக்ஸ் | Photo Story

பிரபாகரன் சண்முகநாதன்

கிட்டத்தட்ட ஒரு விமானத்தின் வேகம் போகும் பைக்குகளெல்லாம் இருக்கின்றன. மோசமான அந்த பைக்குகளில் முக்கியமான 10 பைக்ஸ் பற்றி இங்கு பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ K1200S இதன் 1,157 சிசி கொண்ட 4 சிலிண்டர் இன்ஜினின் பவர் 10,250rpm–ல் 164bhp ஆற்றல் கொடுக்கும். இது மணிக்கு 280 கிமீ வரை பறக்கும் வல்லமை கொண்டது

ஏப்ரிலியா RSV1000R Mille இதுவும் பிஎம்டபிள்யூ போலவே 0–100 கிமீ –யைக் கடக்க 3.1 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது. 10,000rpm–ல் வெளிப்படும் இதன் பவர் 141.3bhp. இது மணிக்கு 285 கிமீ வேகத்தில் பறக்கும்.

எம்வி அகுஸ்ட்டா F4 1000R இத்தாலி நாட்டைச் சேர்ந்த எம்வி அகுஸ்ட்டாவின் இன்ஜின் வேகம்: 1,000 சிசி. பவர் 174 bhp. இதன் டார்க் 10,000rpm-ல் 115Nm. 0–100 கிமீ: 2.7 விநாடிகள். இந்தியாவில் எக்ஸ் ஷோரூம் விலை 38.83 லட்சம்.

ஹோண்டா சிபிஆர் 1100XX பிளாக் பேர்டு பைக் 0-விலிருந்து 100 கிமீ செல்ல 2.8 விநாடிகள் போதுமானது. இன்ஜின் வேகம்: 1,137 சிசி. பவர்: 152 bhp

கவாஸாகி நின்ஜா ZX-14R இன்ஜின்: 1,441 சிசி பவர்: 144bhp இதில் இருப்பது 6 ஸ்பீடு கியர்பாக்ஸ். 200 கிலோ எடை கொண்ட பைக்கை, 50 கிலோ இருக்கும் யாருமே எளிதில் கன்ட்ரோல் பண்ணலா

பிஎம்டபிள்யூ S1000RR–ல் 0–100 கிமீ: 2.7 விநாடிகள் இன்ஜின்: 999 சிசி பவர்: 195.2bhp இது 2.7 விநாடிகளில் 60 கிமீ வேகத்தைத் தொடுகிறது. இந்த பைக்குகளை WSBK (World Super Bike Race) –க்காகவே வடிவமைத்திருக்கிறது பிஎம்டபிள்யூ.

சுஸூகி ஹயபூஸா 0-100 கிமீ: 2.8 விநாடிகள் இன்ஜின்: 1,340 சிசி பவர்: 197bhp ஹயபூஸாவை ஆட்டோமொபைலில் ‘கோஸ்ட்’ என்று செல்லமாக அழைப்பார்கள்.

MTT டர்பைன் Y2K 0-100 கிமீ 2.5 விநாடிகள் இன்ஜின் ரோல்ஸ் ராய்ஸ் 250 C–18 பவர் 320 bhp இந்த MTT டர்பைன் பைக்கில் இருப்பது ரோல்ஸ்ராய்ஸின் Dyne Jet 200 எனும் 320bhp பவரும், 42.5kgm டார்க்கும் கொண்ட இன்ஜின்

கவாஸாகி நின்ஜா H2R 0–100 கிமீ: 2.5 விநாடிகள் இன்ஜின்: 998 சிசி பவர்: 310 bhp. கவாஸாகியின் இன்னொரு பீஸ்ட் – இந்த நின்ஜா. இதன் டாப் ஸ்பீடு சுமார் 395 கிமீ! சுமார் 22 லட்சம் இருந்தால், இந்த H2R பைக்கை வாங்கலாம்

டாட்ஜ் டோமாஹா 0–100 கிமீ: 1.95 விநாடிகள் இன்ஜின்: 8,277 சிசி பவர்: 500bhp. 500 கிமீ–யைத் தாண்டி 550 கிமீ வரை இந்த டாட்ஜ் டோமோஹாக் பறக்கும் என்கிறார்கள் சிலர்