வந்துவிட்டது 2021 சுஸூகி ஹயபூஸா சூப்பர் பைக் 3–வது ஜெனரேஷன்! #Hayabusa

தமிழ்த்தென்றல்

ஹயபூஸா சூப்பர் பைக்கின் 3–வது ஜெனரேஷன் மாடலை, 2021–க்கு ஏற்ப வெறித்தனமாக இறக்கி விட்டிருக்கிறது சுஸூகி.

1,340 சிசி, Inline-4 சிலிண்டர்களுடன், Euro-5 எமிஷன் நார்ம்ஸுக்கு ஏற்ப 187.7bhp பவருடன், லிக்விட் கூல்டு இன்ஜினுடன் வந்திருக்கிறது ஹயபூஸா.

இதன் ரைடு பை வொயர் எலெக்ட்ரானிக் த்ராட்டில் சிஸ்டம், பழைய ஹயபூஸாவைவிட இதன் மிட் மற்றும் டாப் ரேஞ்சை இன்னும் பெப்பியாக்கும்.

இதன் டார்க் 15kgm@7,000rpm. கியர்பாக்ஸ் அதே 6 ஸ்பீடுதான்.

இந்த ஹயபூஸாவின் எடை 264 கிலோ என்பதால், ஆஜானுபாகு பார்ட்டிகளுக்குத்தான் இதன் ஹேண்ட்லிங் பக்காவாக இருக்கும்.

பைக்கில் எலெக்ட்ரானிக் விஷயங்களில்தான் ஏகப்பட்ட அப்கிரேடு. ரைடு பை வொயர் எலெக்ட்ரானிக் த்ராட்டில் சிஸ்டம்,

SIRS - Suzuki Intelligent Riding System, 5 ரைடிங் மோடுகள், பவர் மோடு செலகெ்டர், ஆக்டிவ் ஸ்பீடு லிமிட்டர், இன்ஜின் பிரேக்கிங் கன்ட்ரோல்,

ட்ராக்ஷன் கன்ட்ரோல், bi-directional க்விக் ஷிஃப்ட் சிஸ்டம், ஆன்ட்டி லிஃப்ட் கன்ட்ரோல் சிஸ்டம், லான்ச் கன்ட்ரோல் சிஸ்டம்,

ஹில் ஹோல்டு கன்ட்ரோல் சிஸ்டம் - என ஏகப்பட்ட சிஸ்டங்களுடன் வந்திருக்கிறது ஹயபூஸா.

இந்த ஹயபூஸாவுக்கு சுமார் 14.9 கிமீ மைலேஜை க்ளெய்ம் செய்கிறது சுஸூகி.