மோசமான டிரைவிங்கில் முக்கியமான இடத்தில் உள்ள தமிழ் நாட்டின் நகரங்கள் பற்றிய சர்வே! |Visual Story

மு.பூபாலன்

‘ஜூம்’ என்ற தனியார் நிறுவனம், நவம்பர் 2020 முதல் 2021 வரை இந்தியா முழுக்க மோசமான டிரைவிங் செய்யும் சுமார் 22 நகரங்களில் ஒரு சர்வே நடத்தியிருக்கிறது. அதில் நம் சென்னைக்கு எந்த இடம், அதில் இடம்பெறும் தமிழ் நாட்டின் பிற நகரங்கள் என்னென்ன என்பதைக் காண்போம்.

மோசமான டிரைவிங்கில் முக்கியமான நகரமாக சென்னை 6வது இடத்தில் உள்ளது. சென்னையில் 12.3% மோசமான வாகன ஓட்டிகளும், நல்ல டிரைவர்கள் 23.6 சதவிகிதமும், சுமாரான ஆவரேஜ் டிரைவர்கள் 64.1 சதவிகிதமும் இருக்கிறார்களாம்.

அதற்கு அடுத்து 7–வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டின் நகரம் கோயம்புத்தூர். இதில் மோசமான வாகன ஓட்டிகளின் சதவீதம் 11.5%, ஆவரேஜ் டிரைவர்கள் 67.5%, நல்ல டிரைவர்கள் 21% உள்ளனர்.

10.4% மோசமான வாகன ஓட்டிகளைக் கொண்டு 11வதாக இடத்தில உள்ள நகரம் திருச்சி. இதில் மோசமான வாகன ஓட்டி 10.4%, ஆவரேஜ் டிரைவர்கள் 64.2%, நல்ல டிரைவர்கள் 25.4% உள்ளனர்.

இந்த சர்வேயில் மோசமான டிரைவிங்கில் முதல் இடம் பெற்ற நகரம் மைசூர். இங்கு 18.5% வாகன ஓட்டிகள் மோசமாக டிரைவிங் செய்வதாக கூறுகிறது இந்த ‘ஜூம்’ நிறுவனத்தின் சர்வே.

அஹமதாபாத் நகரம் 14.8% மோசமான வாகன ஓட்டிகளைக் கொண்டு இரண்டாம் இடத்தில் உள்ளது.

பெங்களூர் 14% மோசமான வாகன ஓட்டிகளைக் கொண்டு மூன்றாவது இடத்தில உள்ளது.

இதைத் தொடர்ந்து ஜெய்ப்பூர், விசாககப்பட்டினம் (vizag), உடுப்பி- மணிப்பால், இந்தோர் போன்ற 22 இந்திய நகரங்கள் இந்த மோசமான டிரைவிங் இடம் பெற்றுள்ளன.

இதில் நல்ல டிரைவர்கள் கொண்ட நகரமாக, மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தோர் மாவட்டம்தான் முதலிடத்தில் இருக்கிறது. இங்கேதான் இந்தியாவிலேயே அதிகப்படியாக 35.4% அருமையான டிரைவர்கள் இருக்கிறார்களாம்.

இதற்குக் முக்கியமான காரணம், டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும் விதம். மத்தியப் பிரதேசத்தில் ஆட்டோமேட்டட்ட டிரைவிங் டெஸ்ட் ட்ராக்குகளில் கார்/பைக் ஓட்டி நல்ல மதிப்பெண் எடுத்தால்தான் டிரைவிங் லைசென்ஸ்.

சென்னையிலும் இதுபோன்ற ஆட்டோமேட்டட் ட்ராக்ஸ் வந்துவிட்டால், திறமையான வாகன ஓட்டிகள் அதிகம் உருவாகி விபத்துகள் குறைய வாய்ப்புள்ளது.