ஆணுறுப்பின் அளவு சிறியதாக இருந்தாலும் இந்த அச்சம் தேவையற்றது! | Visual Story

இ.நிவேதா

டிரான்ஸ்ஜெண்டர் எனப்படும் மாற்றுப் பாலினத்தவர்களின் உடல், ஜீன் மற்றும் ஹார்மோன் ஆகியவற்றை மருத்துவ முறைப்படி பரிசோதனை செய்தால், இவர்கள் ஆண் அல்லது பெண் என ஒரு பாலினத்தைச் சார்ந்தவர்களாக  இருப்பார்கள். 

திருநர்கள் தங்களது பிறப்பு பாலினத்தில் இருந்து தங்களை வேறுபட்டு உணர்ந்து, `என்னை ஆணாக/பெண்ணாக உணர்கிறேன்' என்பார்கள்.

Transgender

Gender Identity Crisis நிலைக்கு என்ன காரணம் என்பதை மருத்துவரீதியாக இதுவரை கண்டறியவில்லை. `ஜெனிடிக் கோளாறு' என்கிற தியரி ஒன்று இருக்கிறது. ஆனால், அது உண்மை கிடையாது. 

Gene

தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது, குழந்தையின் செக்ஸ் ஹார்மோனில் சமநிலையின்மை நிகழ்ந்திருந்தால், பின்னாளில் டிரான்ஸ்ஜெண்டர் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. இதுவும் நிரூபிக்கப்படவில்லை. 

சிலர் இன்டர்செக்ஸையும், டிரான்ஸ்ஜெண்டரையும் குழப்பிக் கொள்கிறார்கள். இன்டர்செக்ஸ் நிலையில், ஆணாக இருந்தால், ஆணுறுப்பு முழுமையாக வளர்ந்திராமல் பெண்ணுறுப்பும் சேர்ந்து வளர்ந்திருக்கும். பெண்ணாக இருந்தால், பெண்ணுறுப்பு முழுமையாக வளர்ந்திராமல், ஆணுறுப்பும் சேர்ந்து வளர்ந்திருக்கும். 

Stressed woman (Representational image) | Pixabay

சிறுவர்களுக்கு ஆணுறுப்பு சிறியதாக இருந்தால் அவர்கள் திருநங்கையாக மாறி விடுவார்களா என சில பெற்றோர் அச்சம் கொள்கிறார்கள். அது அவசியமற்றது. வளர்ந்த பிறகு, அவர்களுக்கு விறைப்புத்தன்மை வரும்போது ஆணுறுப்பின் நீளம் 5 செ.மீ இருந்தால் போதும்.   

LGBTQ | Photo by Jose Pablo Garcia on Unsplash