செக்ஸுவல் ஃபேன்டஸி என்றால் என்ன?! I #VisualStory

இ.நிவேதா

செக்ஸுவல் ஃபேன்டஸி என்றால் என்ன? இது தாம்பத்ய வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குமா? செக்ஸுவல் ஃபேன்டஸி என்றாலே இணையைத் துன்பப்படுத்தி காமம் அனுபவிப்பதுதானா? தவறுகள் நீக்கி தெளிவு பெறுவோம்.

pixabay

நீங்கள் கார் வாங்கப் போகிறீர்கள் என்றால், வாங்கிய பின் அதை எப்படியெல்லாம் ஓட்டப்போகிறீர்கள் என மனதில் கற்பனை செய்வீர்கள் அல்லவா? அதைப்போல உங்கள் இணையுடனான காம வாழ்க்கையை எப்படியெல்லாம் என்ஜாய் செய்யலாம் என கற்பனை செய்வதே செக்ஸுவல் ஃபேன்டஸி.

Car

இதை விதவிதமாக, அதே நேரம் சரியாகச் செய்தால், உங்கள் தாம்பத்ய உறவு கலர்ஃபுல்லாக இருக்கும். மற்றபடி, எல்லா விஷயங்களிலும் ப்ளஸ், மைனஸ் இருப்பதுபோல, செக்ஸுவல் ஃபேன்டஸியிலும் இருக்கிறது.

pixabay

செக்ஸுவல் ஃபேன்டஸியிலும் கணவன், மனைவி இருவருக்குமே விருப்பம் இருக்க வேண்டும். கூடவே, செல்லக் கடிகளைத் தாண்டி ஒருவரையொருவர் துன்புறுத்தக் கூடாது.

pixabay

செக்ஸுவல் ஃபேன்டஸி 11 வயதிலிருந்தே வர ஆரம்பித்துவிடும். அது டீன் ஏஜில், எதிர்பாலின ஈர்ப்பு, அவர்களை முத்தமிட்டால், அணைத்தால் எப்படியிருக்கும் என நினைத்துப் பார்க்க வைக்கும். இந்தக் கற்பனைகளையெல்லாம் காதலிக்கும்போதோ, திருமணத்துக்குப் பிறகோ நிஜமாக்கிக் கொள்வார்கள்.

pixabay

தாம்பத்ய உறவுக்கு முந்தைய முன் விளையாட்டுகள், வீட்டுக்குள்ளே வெவ்வேறு இடங்களில் உறவு கொள்வது, இருட்டைத் தவிர்த்து மெல்லிய வெளிச்சத்தில் உறவு கொள்வது, ஓரல் செக்ஸ், 69 ஷேப் என எல்லாமே செக்ஸுவல் ஃபேன்டஸிதான்.

pixabay

எந்நேரமும், `அப்படி செக்ஸ் வெச்சுக்கலாமா; இப்படி செக்ஸ் வெச்சுக்கலாமா’ என யோசித்து, எந்த வேலையும் செய்ய முடியாமல் போனால், உங்கள் செக்ஸுவல் ஃபேன்டஸி அளவுக்கு அதிகமாகச் சென்று கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

Stressed | Pexels

உங்கள் கற்பனைகளை நிறுத்திவிட்டு, கவனத்தை வேலையில் செலுத்துங்கள். தூங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக செக்ஸ் கற்பனைகளில் ஈடுபட்டுக் கொள்ளலாம் என மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்.

pixabay

உங்கள் லைஃப் பார்ட்னரை தவிர்த்து மற்றவர்களைப் பார்க்கும்போது, `இவருடன் அப்படி செக்ஸ் வெச்சுக்கிட்டா’ என்று தோன்றினால், உங்கள் சமூக வாழ்க்கை கெடப்போகிறது என்று அர்த்தம்.

pixabay

உடனடியாக இந்த எண்ணத்திலிருந்து வெளியே வந்து விடுங்கள். `முயற்சி செஞ்சு பார்த்துட்டேன், முடியல’ என்பவர்கள் உடனடியாக உளவியல் நிபுணரைப் பார்த்து விடுங்கள். இந்த மனநிலை, குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் பீடோஃபீலியாவாகக்கூட மாறலாம்.

pixabay

ஒரு சிலர், அடுத்தவர் குளிப்பதை, இயற்கை உபாதை வெளியேற்றுவதை பார்க்க விரும்புவார்கள். இவர்களும் உடனடியாக உளவியல் நிபுணர்களைப் பார்க்க வேண்டியவர்களே.

pixabay

சிலர், தன் நிர்வாணத்தை அடுத்தவர் பார்க்கும் சூழ்நிலையை ஏற்படுத்துவார்கள். இன்னும் சிலர் அடுத்தவரையோ, தன் இணையையோ துன்பப்படுத்தி, அவர் துடித்துக்கொண்டிருக்கிற நேரத்தில் உறவு கொள்ள விரும்புவார்கள்.

pixabay

செக்ஸுவல் ஃபேன்டஸியில் எவையெல்லாம் தவறோ, அவை அத்தனையும் சட்டப்படி குற்றம் என்பதை உணருங்கள். கணவனும் மனைவியும் பரஸ்பரம் பேசி, `செக்ஸில் புதுசா இப்படி ட்ரை பண்ணலாம்' என்று முயற்சி செய்வதுதான் செக்ஸுவல் ஃபேன்டஸி.

pixabay