உயிர்ச்சூழலின் முக்கிய நண்பன் நம்ம தேவாங்கு!

அ.பாலாஜி

இந்தியாவிலேயே தேவாங்குகள் கரூர், திண்டுக்கல் மாவட்ட எல்லைகளில் பரந்து விரிந்துள்ள காப்புக்காடுகளில் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. தமிழக அரசு சரணாலயம் அமைய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி காலத்தில் இருந்த கடற்படையில் திசைகாட்ட இந்தத் தேவாங்குகளைத்தான் பயன்பயன்படுத்தியதாக வரலாறு சொல்கிறது.

இதன் உடம்பில் இருக்கும் ரோமங்கள் மூலமாக விதைப் பரவல் செய்கிறது. விவசாய பயிர்களுக்கு ஊறு செய்யும் பூச்சிகளை அழிக்கிறது. உயிர்ச்சூழலின் முக்கியக் கண்ணியாக கருதப்படுகிறது.

அதிகபட்சம் 300 கிராம் எடைகொண்ட தேவாங்கு, ஓர் அரிய உயிரினம். விவசாயத்துக்கு எதிரியாக இருக்கும் புழு, பூச்சிகள் தான் இதற்கு உணவு.

தேவாங்குகள் இரவு 7 மணிக்குதான் காடுகளை விட்டு வெளியே இரை தேடி வரும். நள்ளிரவு ஒரு மணி வரை உணவு வேட்டை நடத்தும். இனப்பெருக்கம் காலமும் அதுதான்.

இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தேவாங்கு பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் (பிரிவு 'அ') முதலிடத்தில் உள்ளது.

மனிதர்கள் செய்யும் தவறுகளால் இந்த இனம் மெள்ள அழிந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் தேவாங்குகளைக் காப்பாற்ற கிழக்கு மலைத்தொடர்ச்சிக் குன்றுகளைத் தேவாங்குகள் சரணாலயமாக அறிவிக்கபட உள்ளது.