திருச்சிக்கு போனா மிஸ் பண்ணக்கூடாத சாப்பாட்டுக் கடைகள் |Photo Story

பிரபாகரன் சண்முகநாதன் & Mouriesh SK

திருச்சி சந்துகடை பிரியாணி - மலைக்கோட்டையில் இருந்து சிறிது தொலைவிலேயே உள்ளது இந்தப் பிரியாணிக்கடை

ஶ்ரீ ராகவேந்திரா அன்னபூரணி மெஸ் முறுக்கு - இங்கு செய்யப்படும் முறுக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மிகவும் பிடித்ததாம்.

ஸ்ரீ வாசவி கரம் ஸ்டால் - திருச்சி மாநகரின் மைய பகுதியான தில்லை நகர் 10 வது குறுக்கு சாலையில் உள்ள ஸ்ரீ வாசவி கரம் ஸ்டால் என்னும் வீட்டுமுறை உணவகம்.

ராஜா கார்டன் ரெஸ்டாரெண்ட் - பல குடும்பங்களின் ஃபேவரைட் உணவகம். இங்கு உணவு மட்டும் சிறப்பு இல்லை, உணவகத்தின் அமைப்பே சிறப்புதான்

குரு உணவகம் - 11 வகையான சட்னி உடன் காலையிலும், இரவிலும் கிடைக்கும் இட்லி தான் இங்கு சிறப்பு

’ட்ராபிக் ஜாம்’ ஹோட்டல் - ’அசைவப் பிரியர்’களுக்கு ஏற்ற இடமென்றால் அது மலைக்கோட்டை அருகேயுள்ள ’ட்ராபிக் ஜாம்’தான்

ஜெய்லானி உணவகம் சிக்கன் பிரியாணி, மக்கள் அதிகமாக விரும்பிக் கேட்கும் குஸ்கா, பொரித்த பரோட்டா, சால்னா என மதிய நேரத்தில் சாப்பிடுவதற்கு அருமையான உணவகம்

நைனா தோசை கடை - திருச்சி தில்லை நகரின் உட்பகுதியில் இருக்கும் நைனா தோசை கடையில் 40க்கும் அதிகமான சுவையில் தோசை, அடை, சப்பாத்தி கிடைக்கும்.

குருக்ருபா ஹோட்டல் - சைவ பன் பரோட்டா, மைசூர் மசால் தோசைக்குச் சின்ன வெங்காய சாம்பார், காரச் சட்னி, தேங்காய்ச் சட்னி என பரிமாறும் சைவ ஸ்பாட் இது.

கார்த்திக் மெஸ் - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் இந்நாள் முதல்வர் ஸ்டாலின் வரையிலும் திருச்சிக்கு வந்தால் இந்த மெஸ்ஸின் சாப்பாட்டை விரும்பிச் சாப்பிடுவார்கள்.