காபி: வகைகள், வரலாறு, ஆரோக்கியம்! Visual Story

இ.நிவேதா

காபியில் ஃபில்டர் காபி, எஸ்ப்ரஸோ, கேப்பச்சினோ, லாட்டே, மச்சியாட்டோ, ஐரிஷ், ட்ரசிஸ், கஃபன் நீக்கப்பட்டது மற்றும் இன்ஸ்டன்ட் எனப் பல வகைகள் உள்ளன.

ஃபில்டர் காபி | Varuna

காபி காய் பழுத்து பச்சை நிறத்திலிருந்து சிவப்பு நிறமான பின் பறிக்கப்பட்டு, ஊறவைத்து பழத்தின் மேலுள்ள தோல் உரிக்கப்படும். அந்தக் காயை வெயிலில் காயவைத்து, பதமாக வறுத்து, அரைத்த பின் காபி குடிநீர் எடுக்கப்படுகிறது.

காபியில் கஃபைன் என்ற வேதிப்பொருள்தான் முக்கியமானது. அதுதவிர, வேறு வேதிப்பொருள்களும் உள்ளதால் தான் கஃபைன் நீக்கப்பட்ட காபியைப் பருகினால்கூட புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

காபியிலிருக்கும் `குளோரோஜெனிக் அமிலம்' என்ற நன்மை பயக்கும் வேதிப்பொருளால் ஞாபக சக்தி அதிகரிக்கும், மாரடைப்பு வாய்ப்பு குறையும், சில வகை புற்றுநோய்களைத் தடுக்கும், கல்லீரல் நோய்கள் கட்டுப்படுத்தப்படும் மற்றும் பக்கவாதம் வருவது குறையும் எனப் பல ஆய்வுகள் கூறுகின்றன.

காபியின் வரலாறு: 14-ம் நூற்றாண்டின் மத்தியில், ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டில் ஆடுமேய்த்த கல்டி என்பவரின் ஆடுகள் ஒருவகையான பழத்தைத் தின்ற பின் இரவு முழுவதும் தூங்காமல் புத்துணர்வுடன் இருப்பதைக் கவனித்ததில், அது அப்பழத்தின் கொட்டையால் இருக்கலாம் எனக் கண்டறிந்ததில் இருந்து காபியின் கதை தொடங்குகிறது.

எத்தியோப்பியாவில் இருந்து காபி கொட்டையை எடுத்துச் சென்ற ஏமன் நாட்டு வியாபாரிகள் காபிக் கொட்டையைத் தண்ணீரில் வேகவைத்து, வடிநீர் எடுத்துக் குடிக்கும் பழக்கத்தை உருவாக்கினர்.

ஏமனிலிருந்து மற்ற அரேபிய நாடுகள், துருக்கி மற்றும் பெர்ஷியாவுக்கும் காபி பரவியது. எகிப்தின் தலைநகரமான கெய்ரோவில்தான் காபி கிளப் தொடங்கப்பட்டு, கிளப் கலாசாரம் உருவானது.

மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கு மால்டா தீவு மூலம் காபி சென்றது. ஐரோப்பாவிலுள்ள முக்கிய நாடுகளுக்கு வெனிஸ் நகரம் மூலமாக காபி சென்றடைந்தது.

Coffee

இந்தியாவில் கர்நாடக மாநிலம் குடகு மலைப் பகுதியில் காபி முதன்முதலில் ஆங்கிலேயர்களால் பயிர் செய்யப்பட்டது. காபி டீயைப் போல இல்லாமல் சற்று குளிரான, மற்றும் உயரம் குறைந்த மலைப்பகுதியில் விளையக்கூடியது.

மலை

தமிழ்நாட்டில் சிறிய மலைகளான ஏற்காடு, ஜவ்வாது மலை, கொல்லிமலை, கொடைக்கானல், ஏலகிரி போன்ற இடங்களில் காபி விளைகிறது.

ஏலகிரி மலை

ஒரு நாளைக்கு 2 - 3 கப் காபி குடிக்கலாம். தூக்கமின்மை உள்ளவர்கள் மாலை 4 மணிக்கு மேல் டீ, காபி, குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். வருடம்தோறும் அக்டோபர் 1-ம் தேதி சர்வதேச காபி தினமாகக் கொண்டாடப்படுகிறது.

காபி கேன் போர்ட்ஃபோலியோ