கும்பகோணம் டிகிரி காபி; சுவைக்கு இதுதான் காரணம்! I Visual Story

இ.நிவேதா

அடர்த்தியான டிக்காக்‌ஷன் - சொட்டு தண்ணீர்கூட கலக்காத பசும்பாலில் தயாரிப்பதுதான் கும்பகோணம் டிகிரி காபி.

காபி ஓவியம் | வருணா

காலையில் குடிக்கும் காபியின் சுவை நான்கு மணி நேரத்துக்காவது நாக்கில் தங்கினால்தான் அது சிறப்பான, தரமான டிகிரி காபி.

காபி

தரமான காபித்தூளில் பித்தளை ஃபில்டர் பாத்திரத்தில் டிக்காக்‌ஷன் ரெடி செய்து, அதை டிகிரி பாலில் கலப்பதே கும்பகோணம் டிகிரி காபியின் தனிச் சுவைக்குக் காரணம்.

காபி கொட்டை

அந்தக் காலத்தில், வியாபாரிகளிடமிருந்து பால் வாங்கும்போது அதில் தண்ணீர் கலந்திருக்கிறதா என்று பார்க்க, கண்ணாடி டம்ளரில் பாலை ஊற்றி 20 நிமிடங்கள் வைப்பார்கள்.

பால்

கிளாஸில் இருந்து பாலை வேறு பாத்திரத்துக்கு மாற்றின பிறகு, அந்தக் கிளாஸில் பால் பிசுபிசு என்று அடர்த்தியாக ஒட்டியிருந்தால், அது தண்ணீர் கலக்காத பால் என்று உறுதி செய்வார்கள்.

கண்ணாடி டம்ளரில் பால்

பாலில் தண்ணீர் கலந்திருக்கிறதா என்று கண்டுபிடிக்க, லேக்டோமீட்டர் கருவியை சிலர் பயன்படுத்துவது உண்டு. ஒரு கிளாஸில் பாலை ஊற்றி, அதில் லேக்டோமீட்டரை வைத்து, ஐந்து நிமிடங்கள் கழித்து லேக்டோமீட்டரை எடுத்துப் பார்த்தால், பாலின் தரத்தை பர்சென்டேஜ்ஜில் காட்டும்.

பித்தளை டபரா

தண்ணீர் கலந்த பாலில் காபி போட்டால் முழுமையான டேஸ்ட் கிடைக்காது என்பதால், காபி கடைக்காரர்கள் பலரும் பாலில் `டிகிரி’ பார்க்கும் இந்த முறையைப் பின்பற்றி வந்தார்கள். மக்கள் அந்தச் சுவையை `டிகிரி காபி கொடுங்க' என்று குறிப்பிட்டுக் கேட்க ஆரம்பிக்க, அந்தப் பெயர் வந்துவிட்டது.

பசுமாடுகள்

அந்தக் காலத்தில் கும்பகோணத்தில் வீடுகளில் மட்டுமன்றி, ஹோட்டல்களிலும் பசு மாடுகள் வளர்த்தார்கள். பால் கறந்த சூடு ஆறாமல் அதைக் கொதிக்க வைத்து, சிக்கரி கலக்காத காபிப்பொடியில் அடர்த்தியான டிக்காக்‌ஷன் எடுத்து, பித்தளை டம்ளர் டபராவில் காபி ஆற்றிக்கொடுப்பார்கள்.

பால்

டிக்காக்ஷனைப் பொறுத்தவரை, காபி கொட்டையை மொத்தமாக வாங்கிப் பக்குவமாக வறுத்து பதமாக அரைத்து வைத்துக் கொள்வார்கள்.

காபி

காபி கொட்டை கொஞ்சம் கருகினாலும் காபியின் டேஸ்டே மாறிவிடும். அரைத்த காபி தூளை, பித்தளை ஃபில்டர் பாத்திரத்துல தண்ணீர் ஊற்றி அதில் சேர்த்து, கொதிக்க வைத்து, கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் கழித்து சொட்டு சொட்டாக வழியும் காபி டிக்காக்ஷனை தேவைக்கேற்ப பாலில் கலந்து கொடுப்பார்கள். கும்பகோணம் காபியின் சுவை கூடி நாக்கிலும் மனதிலும் தங்கிவிட இவையெல்லாம்தான் காரணம்.

டிகிரி காபி