இ.நிவேதா
முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் எனக் கருதி, பலரும் மஞ்சள் கருவைத் தவிர்த்து, வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுகிறார்கள்.
முட்டையின் வெள்ளைக் கருவைவிட மஞ்சள் கருவில்தான் அதிக ஊட்டச்சத்துத்துகள் உள்ளன. வெள்ளைக் கருவில் புரதம் மட்டுமே உள்ளது. ஆனால் மஞ்சள்கருவில் புரதமும், கொழுப்பும் நிறைந்துள்ளன.
வாரத்துக்கு நான்கு முதல் ஐந்து மஞ்சள் கருவைச் சாப்பிடலாம். அதை வேகவைத்துச் சாப்பிடுவது சிறந்தது.
கோழியின் உணவைப் பொறுத்து, மஞ்சள்கருவின் அடர்த்தி இருக்கும். மஞ்சள் கருவிலுள்ள செலினியம் மார்பகம் மற்றும் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
இதில் உள்ள வைட்டமின் கே, எலும்புகளுக்கு வலுகொடுக்கும். ஆஸ்டியோபோரசிஸ் வராமல் தடுக்கும்.
ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, உடலில் ஆக்சிஜன் சீராகப் பரவ உதவும்.
முட்டையில் உள்ள கோலின் ஊட்டச்சத்து, மூளையை சுறுசுறுப்பாக இயக்கும். கண் வளர்ச்சிக்கும், முதுமையில் வரும் கண்புரையை சரிசெய்யவும் உதவும்.
அல்சைமர் மற்றும் மனஅழுத்தத்துக்கு நிவாரணம் தரும்.
மஞ்சள்கருவில் உள்ள கோலின் ரத்த நாளங்களை பாதிக்கும் ஹோமோசைஸ்டின் அளவை (Homocysteine Level) ஒழுங்குபடுத்தும்.
இது ஆன்டிஇன்ஃப்ளாமேட்டரியாகச் (Anti-inflammatory) செயல்பட்டு இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
உண்மையில், மஞ்சள் கருவில் உள்ள கொழுப்பு, கல்லீரலில் உற்பத்தியாகும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, உடல் பருமன் ஏற்படுவதைத் தடுக்க உதவும்.