அப்துல்கலாமின் 91-வது பிறந்தநாள்; உத்வேகம் தரும் அவரது பொன்மொழிகள்!| #VisualStory

நெ.ராதிகா

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்று முழங்கி சரித்திரம் படைத்த, சாமான்ய மக்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாம் அவர்களின் 91வது பிறந்தநாள் தினம் இன்று!

அப்துல்கலாம்

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், இந்தியாவின் 11-வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் நேசிக்கப்பட்ட அற்புதமான பேச்சாளர், இளைஞர்களின் முன்மாதிரி... டாக்டர்.ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்.

அப்துல்கலாம்

இளைஞர்களின் கனவு நாயகனாக திகழ்ந்த கலாமின் உத்வேகம் அளிக்கும் பொன்மொழிகள் சில இங்கே...

கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.

ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல. உன்னைப் போல சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே.

அப்துல்கலாம்

ஒரு நல்ல புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்கு சமம். ஆனால் ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்கே சமம்.

நீ அழுது உன் தாய் சிரித்த தினம் உண்டெனில் அது உன் பிறந்த நாளாக மட்டுமே இருக்கும்.

அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.

ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால் ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்.

APJ Abdul Kalam

துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.

நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு.

உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்!

A. P. J. Abdul Kalam

தவறான காரியங்களை ஒரு போதும் செய்யக்கூடாது. ஒரு இலக்கை நோக்கி செல்ல பல வழிகள் இருந்தாலும் நேர்மையான வழியே மிகச்சிறந்த வழி என்பதுடன் அது மட்டுமே வழியாக இருக்க வேண்டும்.

முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்துவிடாதே! அடுத்தமுறை தோல்வியுற்றால், உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால்தான் கிடைத்தது என்பர்!

அப்துல் கலாம்

நாட்டின் மிகச்சிறந்த மற்றும் திறைமை மிக்க மூளைகள் பள்ளியறையின் கடைசி பெஞ்சில் இருக்கத்தான் வாய்ப்பு அதிகம்.

அற்ப சந்தோஷங்களுக்காக ஓடுவதைவிட உயர்ந்த லட்சியங்களுக்காகப் பாடுபடுவது சாலச் சிறந்தது!

நாம் உடல் நலமுடனும், மனநலமுடனும், மன வலிமையுடனும் வாழ சிரிப்பு அவசியம். அது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

Main source : Net; Books for reference : * Agni siragugal by Arun Divari, * Inspiring thoughts, * My life an illustrated autobiography, * Ignited Minds: Unleashing the Power Within India.

அப்துல் கலாம்