``காந்தியா, லட்சுமியா, விநாயகரா..?" ரூபாய் நோட்டுகளை மாற்றும் அதிகாரம் யாருக்கு?

இ.நிவேதா

சமீபத்தில் ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகரின் படங்களைச் சேர்த்து அச்சிட வேண்டும் என மத்திய அரசிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். 

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தச் சம்பவம் பல சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. உண்மையில் மத்திய அரசால் நினைத்த மாத்திரத்தில் ரூபாய் நோட்டுக்களை மாற்றியமைக்க முடியுமா என்பது போன்ற கேள்விகள் எழலாம். 

பணம்... Money!

ஆர்.பி.ஐ சட்டம் (RBI Act) 22-வது பிரிவின் படி, இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கிக்கு முழு உரிமை உண்டு. 

அதுவே வங்கி நோட்டுக்களின் டிசைன், மெட்டீரியல் போன்றவற்றை ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு பரிந்துரைக்கும் பட்சத்தில், மத்திய அரசால் அவை அங்கீகரிக்கப்படலாம் என ஆர்.பி.ஐ சட்டம் 25-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Indian currency

நாணயங்களைப் பொறுத்தமட்டில், நாணய சட்டம் 2011-ன் படி, பல்வேறு வகையான நாணயங்கள் வடிவமைத்து அச்சிடுவதற்கு இந்திய அரசே பொறுப்பு. நாணயங்களை விநியோகிப்பதில் ரிசர்வ் வங்கியின் பங்கு வரம்புக்குட்பட்டது என்றே கூற வேண்டும். 

ரூபாய் நாணயங்கள்

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, இதுவரை பல வகையான ரூபாய் நோட்டுகள் வெளியாகியுள்ளன. 1949-ம் ஆண்டு முதன்முறையாக ஒரு ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. அதில் சாரநாத் அசோக தூணின் சிங்க சின்னம் அச்சடிப்பட்டு இருந்தது. 

சுதந்திரம்

அதன் பிறகு 1987-ம் ஆண்டு 500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதிலும் சாரநாத் அசோக தூணின் சிங்க சின்னம் வாட்டர்மார்க்காக இடம் பெற்றிருக்கும். 

தேசிய சின்னம்

1996-ம் ஆண்டு முதல் அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் முன்புறத்தில் மகாத்மா காந்தியின் உருவப்படம் இருந்தது. 

Mahatma Gandhi

2005-ம் ஆண்டில் 10, 20, 50, 100, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவப்படம் இடம்பெற்றது. நவம்பர் 8 நள்ளிரவு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து 2016-ல் புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

#Demonetisation