ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு! #VisualStory

துரைராஜ் குணசேகரன்

அஸ்ஸாமில் 126 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும்.

வாக்குப்பதிவு: மார்ச் 27, ஏப்ரல் 01, ஏப்ரல் 06.

கேரளாவில் 140 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்!

வாக்குப்பதிவு நாள்: ஏப்ரல் 06.

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெறும்.

வாக்குப்பதிவு நாள்: ஏப்ரல் 06.

மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கான தேர்தல் எட்டுகட்டங்களாக நடைபெறும்.

வாக்குப்பதிவு நாள்கள்: மார்ச் 27, ஏப்ரல் 01, 06, 10, 17, 22, 26, 29.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெறும்.

வாக்குப்பதிவு நாள்: ஏப்ரல் 06.

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 2 -ம் தேதி எண்ணப்படும்.

வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள்!

தமிழகத்தில் அதிக வாக்காளர்களைகொண்ட தொகுதி சோழிங்கநல்லூர்.

தமிழகத்தில் குறைவான வாக்காளர்களைக்கொண்ட தொகுதி சென்னை துறைமுகம்!

தமிழகம் உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன!