கி.ச.திலீபன்
உயிரியியலில் `Keystone species' என்று அழைக்கப்படக்கூடிய ஆதார உயிரினங்களில் ஒன்று யானை. யானையின் வாழ்வு காட்டுக்கும் நமது உயிர்ச்சூழலுக்கும் இன்றியமையாதது
யானைகளின் உயிரிழப்பை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் இந்த விபத்து அதிகம் நடக்கிறது.
எந்தத் தண்டவாளத்தில் யானைகள் அதிகம் இறக்கின்றன என்பதைக் கண்டறிந்து அந்தத் தண்டவாளத்தை குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
எந்த இடத்தில் யானைகளின் நடமாட்டம் இருக்கிறதோ அப்பகுதிகளில், ரயில் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
காட்டுப் பகுதியில் இரவு நேரங்களில் மட்டும் மணிக்கு 30 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்க உத்தரவிட வேண்டும்.
காட்டுப்பகுதிக்குள் செல்கையில் ஒலி எழுப்பிக்கொண்டே செல்வதும் காட்டுயிர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்.
காட்டுயிர்களின் வாழ்வைப் பொருட்படுத்தினாலே அவற்றின் உயிரிழப்பைத் தடுக்கலாம்.