45 வகைகள், 3,000 தொட்டிகள்... கள்ளிச் செடிகளுக்கென ஊட்டியில் பிரத்யேக கண்ணாடி மாளிகை!

சதீஸ் ராமசாமி & கே.அருண்

பொது முடக்க காலத்தில் நீலகிரி சுற்றுலாத்தலங்களில் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றாலும், பூங்கா பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. தற்போது பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. சுற்றுலாத்தலங்களும் புதுப்பொலிவு பெற்று வருகின்றன.

Cactus | Photo: Vikatan / Arun

நூற்றாண்டு பழைமை வாய்ந்த பூங்காவான ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை புதுப்பொலிவு செய்யப்பட்டு 45 வகையான கள்ளிச் செடிகள் ஒரே இடத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பூங்கா அதிகாரிகள், ``இந்தப் பூங்காவில் பல்வேறு நாடுகளில் காணப்படும் பல வகையான தாவரங்கள், மலர்ச் செடிகள், மரங்கள், மூலிகைத் தாவரங்கள், பெரணி மற்றும் கள்ளிச் செடிகள் பராமரிக்கப்படுகின்றன.

Cactus | Photo: Vikatan / Arun

மேல் கார்டனில் உள்ள கண்ணாடி மாளிகை தற்போது கள்ளிச் செடிகளுக்கு என ஒதுக்கப்பட்டு, சகூரா, ஓல்டு லேடி, ஸ்டார், ஈஸ்டர் மற்றும் மூன் உட்பட 45 வகைகளில் 3,000 தொட்டிகளில் கள்ளிச் செடிகள் வைக்கப்பட்டுள்ளன.

Cactus | Photo: Vikatan / Arun

வெவ்வேறு வடிவங்களில் காணப்படும் இந்தக் கள்ளிச் செடிகளும், பாலைவனங்களில் காணப்படும் சில தாவரங்களும் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து வருகின்றன. தாவரவியல் ஆய்வு மற்றும் பள்ளி மாணவ மாணவிகளும் இதனால் பயன்பெறுவர்" என்றனர்.

Cactus | Photo: Vikatan / Arun