#2020Rewind சூழலியல் - டாப் 10 நிகழ்வுகள்!

றின்னோஸா

ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீ!

2019 செப்டம்பர் மாதத்திலேயே ஆரம்பித்து 2020 மார்ச் மாதம் வரை கொழுந்து விட்டு எரிந்து, முழு உலகத்தையும் புகை மண்டலமாக மாற்றியது ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீ.

ரஷ்யாவின் Norilsk எண்ணெய்க் கசிவு!

மே மாதம் 29-ம் தேதி அதிகாலை 2 மணி... துருவ ஆர்க்டிக்கில் மிக மோசமான பேரழிவு. 20000 ஆயிரம் டன் டீசல் எரிபொருள் ஆற்றில் கலந்து ஒரு பெரிய நன்னீர் ஏரியையே மாசுபடுத்தியது.

பிலிப்பைன்ஸின் தால் எரிமலை சீற்றம்!

ஜனவரி 12, 2020... பிலிப்பைன்ஸின் கலபார்சன் பிராந்தியத்தின் படங்காஸ் மாகாணத்தில் அமைந்துள்ள தால் எரிமலை (Taal Volcano) 43 ஆண்டுகள் செயலற்ற மௌனத்தின் பின், தன் அமைதியின்மையின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியது.

ஆப்பிரிக்காவில் Locusts வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு!

கூட்டம் கூட்டமாக உலகின் பல இடங்களுக்கும் பறந்து சென்று அச்சுறுத்திய வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு 2020-ல் நடந்த முக்கியமானதொரு சூழலியல் தாக்குதல்.

இலங்கையில் ராட்சச பைலட் திமிங்கலங்களின் கரையொதுக்கம்!

இலங்கையின் கடற்கரையில் 120 திமிங்கலங்கள் கரையொதிங்கின. துரதிர்ஷ்டவசமாக இரண்டு உயிரிழந்த நிலையில் கிட்டத்தட்ட 16 மணி நேர போராட்டத்துக்கு பின் மீதமிருந்தவை மீண்டும் கடலுக்குள் திருப்பி அனுப்பப்பட்டன.

அன்டார்டிகாவின் பச்சைப் பனிப்பொழிவு

பல உயிரியல் சமூகங்களுக்கும் சொந்தமான பனிக்கட்டி கண்டம் அன்டார்டிகாவில் இவ்வருடம் நிகழ்ந்த பச்சை நிறப் பனிப்பொழிவு, சூழலியலாளர்களை மட்டுமல்லாது முழு உலகையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இந்தியா, பங்களாதேஷைக் குறிவைத்த ஆம்பான் சூறாவளி!

22 பேரை பலிகொண்டும், லட்சகணக்கான மக்களை நிர்கதியாக்கியும், பலகோடி நஷ்டத்தை உண்டுபண்ணியும் சென்றது Amphan சூறாவளி.

கிரீஸையும் துருக்கியையும் தாக்கிய மாபெரும் சுனாமி!

அக்டோபர் 30, 2020 அன்று 7.0 மெகாவாட் அளவிலான நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட சுனாமிப்பேரலை கிரீஸின் சமோஸ் தீவு மற்றும் துருக்கியின் இஸ்மீர் பிராந்தியத்தின் ஏஜியன் கடற்கரையைத் தாக்கியது.

அமெரிக்காவை நிலை குலையச்செய்த 30 அட்லான்ட்டிக் சூறாவளிகள்!

மிகவும் தீவிரமாகக் காணப்பட்ட 2020-ன் அட்லான்ட்டிக் சூறாவளி பருவம், அமெரிக்காவில் பெயரிடப்பட்ட 30 புயல்களையும் 12 நிலச்சரிவுகளையும் ஏற்படுத்தி சூழலியலில் மிகப்பெரிய தாக்கத்தையும் மாற்றத்தையும் உருவாக்கியது.

மாசு குறைந்த தூய்மையான இயற்கை!

இந்த கொரோனா வைரஸினால் நடந்த ஒரே ஒரு நன்மை சூழலியல் தூய்மை. 2020-ல் மாசு குறைந்து இயற்கை தன்னைத்தானே சுத்திகரித்துக்கொண்டு மூச்சு விட அவகாசம் எடுத்துக்கொண்டது.