ஆப்கனில் கொல்லப்பட்ட முன்னாள் பெண் எம்.பி முதல் 'ரஷ்ய ராம்போ'வின் விருப்பம் வரை! | உலகச் செய்திகள்

சு.உ.சவ்பாக்யதா

நேபாளில், அந்த நாட்டுப் பயணிகள் விமானமான, எட்டி ஏர்லைன்ஸ் விபத்துக்குள்ளானதில், இதுவரை 68 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றன. நேபாளில் சமீபத்தில் இது போன்ற கோர விமான விபத்து நடந்ததில்லை என்று கூறப்படுகிறது. இந்த விமானத்தில் ஐந்து இந்தியர்கள் பயணம் செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னும் காபூலில் வசித்துவந்த முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான முர்சல் நபிஸாதா அவரின் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் 6 புள்ளி ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. ஆனால் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் பாலியல் குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்ட ஆன்ட்ரூ டேட்-டுக்குச் சொந்தமான 3.95 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இதற்கு முன்னதாக அவரின் சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Alexandru Dobre

பாரிஸின் Gare du Nord ரயில் நிலையத்தில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தில், 31 வயது நபர் ஒருவர் கொலை முயற்சி வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அந்த நபரின் அடையாளம் பற்றி எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை.

Michel Euler

மெக்ஸிகோவில் எந்தப் பொது இடத்திலும் புகைபிடிக்கக் கூடாது என்ற கடுமையான புகை எதிர்ப்பு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

கலிஃபோர்னியாவில் பொழிந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், அந்த நகரமே வெள்ளநீரால் சூழப்பட்டிருக்கிறது. இதனால் 25 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெர்மனியின் Lützerath பகுதியில் கூடியிருந்த 300-க்கும் மேற்பட்ட காலநிலை மாற்றப் போராளிகளை, பல மணி நேர முயற்சிக்குப் பிறகு அந்த நாட்டுக் காவல்துறை அப்புறப்படுத்தியது.

பெரு நாட்டில் நிலவிவந்த கடுமையான போராட்டங்களைக் கட்டுப்படுத்த லிமா பகுதியில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'ரஷ்யாவின் ராம்போ' என அழைக்கப்படும் பிரபல நடிகர் Smolyaninov, போர் நடத்தும் ரஷ்யாவின் மீது வெறுப்பாக இருப்பதாகவும், உக்ரைனுக்காக அவர்களுடன் இணைந்து போர் செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.