உலகை உலுக்கிய 100 நாள்கள்: உக்ரைன், ரஷ்ய போரின் மனதை உறைய வைக்கும் 10 படங்கள்!

VM மன்சூர் கைரி

போரில், ஜெலின்ஸ்கா தன் பேத்தியை இழந்து, தன் வீட்டை இழந்து அகதியாக வெளியேறும் போது அவருக்கு மிச்சம் இருந்தது அவரின் உயிரும், அவர் பேத்தியின் பொம்மையும் தான்.

மே 31, 2022, உக்ரைனில் உள்ள ஸ்லோவியன்ஸ்கில், இரவு நேர ஏவுகணைத் தாக்குதலால் சேதமடைந்த ஒரு காரைக் கடந்து செல்லும் வயதான பெண்.

3 மார்ச் 25, அன்று கார்கிவ் நகரில் ரஷ்ய தாக்குதலைத் தொடர்ந்து எரியும் கடையிலிருந்து உணவுக்காக பொருள்களை மீட்கும் உரிமையாளர்.

குண்டுவெடித்த மகப்பேறு மருத்துவமனையிலிருந்து காயமடைந்த கர்ப்பிணிப் பெண்ணை தூக்கிச் செல்கிறார்கள். ஆனால் தாயும் சேயும் இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

மார்ச் 9, 2022 அன்று உடலை முறையாக அடக்கம் செய்யக்கூட முடியாத போர் சூழலால் பொது குழியில் தன் மகனை அடக்கம் செய்யும் தந்தை.

மார்ச் 15 அன்று கிவ்-வில் ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் தீயை அணைக்கும் பணியில் 4 தீயணைப்பு வீரர்கள் மட்டும்.

முதுகுக்குப் பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில் உயிரற்ற ஆண்களின் உடல்கள். ஏப்ரல் 3, 2022 அன்று உக்ரைனின் புச்சா நகரில் அதிர்ச்சியளித்த சம்பவம்.

ரஷ்ய ராணுவ வீரர்... பனியில் மூழ்கிய சடலம்.

மே 5, 2022 அன்று உக்ரைனில் 22 வயதான ராணுவ மருத்துர் அன்டன் இரண்டு கால்களையும், இடது கையையும் இழந்தார். அப்புகைப்படம் போரின் கொடுமைகளை காட்டியது!

ரஷ்ய ராணுவ வீரர்கள் கிவ் பகுதி விட்டு வெளியேறிய ஏப்ரல் 1 அன்றைய தினம் சாலையில் எடுக்கப்பட்டப் படம்.