வாஷிங்டன்: அமெரிக்க செனட் சபையில் ட்ரம்ப் ஆதரவாளர்களின் அட்ராசிட்டீஸ்!

வருண்.நா

வாஷிங்டனில் உள்ள அமெரிக்க செனட் சபையில் ஜோ பைடனை அதிபராக அங்கீகரித்து சான்று அளிக்கும் நிகழ்வு நடைபெற்றுவந்தது.

இதற்கிடையில் பேசிய ட்ரம்ப், ``தேர்தலில் முறைகேடு நடந்திருக்கிறது. முடிவுகளை ஏற்க முடியாது'' என்றார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார்.

இதையடுத்து ``அடுத்த நான்காண்டுகளும் ட்ரம்ப் ஆட்சியே தொடரும். ஜோ பைடன் அதிபராக வேண்டாம்’’ என முழக்கமிட்டு வாஷிங்டன் வீதிகளில் களமிறங்கினர் ட்ரம்ப் ஆதரவாளர்கள்.

ட்ரம்ப்பின் வீடியோ வன்முறையைத் தூண்டுவதாகக் கூறி, அவரது சமூக வலைதளக் கணக்குகள் சில மணி நேரங்களுக்கு முடக்கப்பட்டன.

ட்ரம்ப் ஆதரவாளர்கள் பெருமளவில் செனட் சபைக்கு முன் குவிந்தனர்.

ட்ரம்ப் ஆதரவாளர்கள் செனட் சபைக்குள் நுழைய முயன்றனர். அவர்களுக்கும் போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்டது.

போலீஸாரையும் மீறி செனட் சபைக்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் சிலர் நுழைந்தனர்.

ட்ரம்ப் ஆதரவாளர்கள் பெருமளவில் செனட் சபைக்குள் நுழைந்ததும், தேசியப் பாதுகாப்புப் படை வரவழைக்கப்பட்டது.

உள்ளே நுழைந்து, அமெரிக்க செனட் சபையை துவம்சம் செய்திருக்கிறார்கள் ட்ரம்ப் ஆதரவாளர்கள்.

மேஜை மேல் கால் போட்டு சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்த ட்ரம்ப் ஆதரவாளரின் புகைப்படம் வைரலானது.

``அதிபராக எடுத்த உறுதிமொழிக்கேற்ப சட்டத்தை ட்ரம்ப் பாதுகாக்க வேண்டும். அவருடைய ஆதரவாளர்களை அமைதி காக்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறினார் பைடன்.

இந்த வன்முறையில், பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சிலர் கத்தியால் குத்தப்பட்டனர். இதுவரை நான்கு பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.