ஜெர்மனியில் பிரதமர் மோடி... ஓங்கி ஒலித்த `2024 Modi Once more' முழக்கம்!

சாலினி சுப்ரமணியம்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்துவரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தை உலகமே உற்று நோக்குகிறது.

இந்தச் சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக, மோடி பெர்லினில் ஜெர்மன் அதிபர் ஓலஃப் ஷோல்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மோடியின் ஜெர்மன் விசிட் | ட்விட்டர்

இந்தியா, ஜெர்மனி இடையிலான வர்த்தகம் மற்றும் ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த முக்கிய விஷயங்கள் அவர்களின் விவாதத்தில் இடம்பெற்றன.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மோடியின் ஜெர்மன் விசிட் | ட்விட்டர்

ஜெர்மன் சென்றுள்ள பிரதமர் மோடி வெளிநாடுவாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அங்கு கூடியிருந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள், ``2024- மோடி ஒன்ஸ் மோர்" என உற்சாக முழக்கங்களை எழுப்பி பிரதமரை வரவேற்றனர்.

மோடியின் ஜெர்மன் விசிட் | ட்விட்டர்

இந்தக் கூட்டத்தில் பேசிய மோடி, ``எனது நாட்டுக் குழந்தைகளை பெர்லினில் சந்திப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஜெர்மனியின் பல்வேறு நகரங்களிலிருந்து பெர்லினுக்கு வந்திருக்கிறீர்கள்" என்றார்.

மோடியின் ஜெர்மன் விசிட் | ட்விட்டர்

``ரஷ்யா, உக்ரைன் இடையிலான போருக்கு அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு. இந்தப் போரில் யாரும் வெல்லப்போவது கிடையாது. இந்தியா அமைதியையே விரும்புகிறது."

புதின் - மோடி | ட்விட்டர்

``உக்ரைன், ரஷ்யா மோதலால் கச்சா எண்ணெய் விலை மிகவும் உயர்ந்திருக்கிறது .இதனால் அத்தியாவசியப் பொருள்கள், உணவுப்பொருள்களின் விலை அதிகரித்துள்ளது."

மோடியின் ஜெர்மன் விசிட் | ட்விட்டர்

ஜெர்மனி பயணத்தைத் தொடர்ந்து மோடி இன்று டென்மார்க் புறப்பட்டுச் சென்றார். அங்கு அந்நாட்டு பிரதமர் மெட்டே ஃபிரெடரிக்‌ஷனைச் சந்தித்துவருகிறார்.

மோடியின் டென்மார்க் பயணம் | ட்விட்டர்