இலங்கையின் புதிய பிரதமர்: ரணில் விக்ரமசிங்க கடந்து வந்த பாதை!

சாலினி சுப்ரமணியம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், 6-வது பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ளார்.

1970-களில் ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணி மூலமாக அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் ரணில்.

ரணில் விக்ரமசிங்க

முதன்முறையாக 1977-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவருக்கு, இளைஞர் விவகார மற்றும் தொழிலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

ரணில்

1980-ம் ஆண்டு கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது. கல்வி அமைச்சராக சுமார் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றிய ரணில் விக்கிரமசிங்க, 1993-ம் ஆண்டு முதன்முறையாக இலங்கைப் பிரதமராகப் பதவி ஏற்றார்.

ரணில்

சந்திரிகா தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் ரணில் இரண்டாவது முறையாகப் பிரதமரானார்.

ரணில்

2015-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றதைதொடர்ந்து, அதிபராக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றுக்கொண்டார். அதன் பின்னர், ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

ரணில்

2018-ம் ஆண்டு நிகழ்ந்த அரசியல் குழப்பத்தால் ஆட்சி கவிழ்க்கப்பட்டது, நீதிமன்றத்தின் மூலம் போராடி மீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.

2021-ம் ஆண்டு, கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் மூலமாக, நாடாளுமன்றத்தில் காலடி எடுத்துவைத்தார்.

1977-ம் ஆண்டு நாடாளுமன்ற அரசியலுக்கு வந்த பிறகு ரணில் எந்தவொரு பொதுத்தேர்தலிலும் தோற்றதில்லை. 42 வருடங்களாகத் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து சாதனையும் படைத்துள்ளார்.

ஆனால், ரணில் விக்ரமசிங்க தனது 43 ஆண்டுக்கால அரசியல் வரலாற்றில், ஒருமுறைகூட தனது பிரதமர் பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்திசெய்தது கிடையாது.