பிரதமர் நேரு தொடங்கி கமல் வரை... எலிசபெத் ராணியின் இந்தியா பயணங்கள்! | Visual Story

சாலினி சுப்ரமணியம்

இந்தியாவுக்கு மூன்று முறை வருகை தந்துள்ள ராணி இரண்டாம் எலிசபெத், ஜவஹர்லால் நேரு முதல் நரேந்திர மோடி வரை பல்வேறு தருணங்களில் அனைத்து இந்திய பிரதமர்களையும் சந்தித்திருக்கிறார்.

இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத் 1961, 1983 மற்றும் 1997 இல் இந்தியாவுக்கு வருகை புரிந்திருக்கிறார்.1961-ல் முதன் முதலாக இந்தியாவுக்கு வருகை புரிந்த போது அப்போதைய இந்திய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் துணை ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றனர்.

1983-ம் ஆண்டு இந்தியா வருகை புரிந்த ராணி எலிசபெத், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்தார். டெல்லியில் அன்னை தெரசாவையும் சந்தித்திருக்கிறார்.

1997-ம் ஆண்டு இந்தியப் பயணம் மேற்கொண்ட எலிசபெத் தமிழ்நாட்டுக்கும் வருகை தந்தார். அப்போது சென்னை தரமணி எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் நடைபெற்ற கமல்ஹாசனின் பிரம்மாண்ட கனவு திரைப்படமான மருதநாயகத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றார்.

மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்க விழாவில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, சிவாஜி, ரஜினி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ராணியை சந்தித்து உரையாடினர்.

இந்தியாவுக்கு வருகை புரிந்த எலிசபெத் மும்பை, ஜெய்ப்பூர், ஆக்ரா, கல்கத்தா மற்றும் சென்னை ஆகிய மாநகரங்களைப் பார்வையிட்டார். சென்னையில் பெருந்தலைவர் காமராசர், கருணாநிதி ஆகியோரையும் சந்தித்தார்.

2009 -ம் ஆண்டு பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற ஜி3 மாநாட்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை எலிசபெத் சந்தித்தார்.

``2015 மற்றும் 2018-ல் இங்கிலாந்து பயணத்தின் போது ராணி இரண்டாம் எலிசபெத்தைச் சந்தித்தேன். அது மறக்க முடியாத தருணம். அவருடைய அரவணைப்பையும், அன்பையும் என்னால் மறக்க முடியாது’’ என பிரதமர் மோடி தனது நினைவலைகளை பகிர்ந்திருக்கிறார்.