பாகிஸ்தானில் எரிவாயு தட்டுப்பாடு| செவிலியர்களின் போராட்டத்தால் திணறும் ரிஷி சுனக் - உலகச் செய்திகள்

க.ஶ்ரீநிதி

உலகப் பொருளாதாரத்துக்கு இந்த ஆண்டு (2023) மிக சவாலாக இருக்கும் என ஐ.எம்.எஃப் ( IMF) கூறியிருக்கிறது.

இங்கிலாந்தில் செவிலியர்கள் அதிக ஊதியம் வழங்கக் கோரிப் போராடி வரும் நிலையில், ரயில் ஊழியர்கள், யூனியன் ஊழியர்கள் உள்ளிட்டோரும் போராட துவங்கியிருக்கின்றனர். இதனால் ரிஷி சுனக் அரசு பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.

twitter

அமெரிக்காவில் மூன்று இந்திய வம்சாவளியினரான ஜுலி எ மேத்தியூ, கே.பி.ஜார்ஜ், சுரேந்திரன் கே படேல் ஆகியோர் மாவட்ட நீதிபதிகளாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவாகியிருக்கிறது.

நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதையடுத்து, ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் நேபாளத்தின் புதிய பிரதமர் பிரசந்தா ஜனவரி 10-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரியிருக்கிறார்.

சீனாவிலிருந்து வரும் எல்லாப் பயணிகளும் கட்டாயம் கோவிட் பரிசோதனை செய்துவிட்டு வர வேண்டும் என கத்தார் அறிவித்திருக்கிறது.

AP

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

பிலிப்பைன்ஸ்

பாகிஸ்தானில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டின் காரணமாக, மக்கள் பிளாஸ்டிக் பலூன்களில் சமையல் எரிவாயுவைச் சேமித்து வைக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தன்னுடைய அமெரிக்கக் குடியுரிமையை புதுப்பிக்கக் கோரியிருக்கிறார்.

தி அரைவல், அவெஞ்சர்ஸ், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ஜெரேமி ரெனர் ( Jeremy Renner) விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.