க.ஶ்ரீநிதி
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணதில் ஆறு வயது சிறுவன் ஆசிரியயை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் படுகாயமடைந்த ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகராகக் குடியரசு கட்சியைச் சேர்ந்த மெக்கார்த்தி (McCarthy) தேர்வாகியிருக்கிறார். அமெரிக்காவில் கடந்த 163 ஆண்டுகளில் சபாநாயகரை தேர்வு செய்ய முடியாமல் நாடாளுமன்றத்தில் குழப்பமான சூழல் நீடிப்பது இதுவே முதல்முறை.
உக்ரைன் ரஷ்யா போரில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மூன்று பில்லியன் மதிப்பிலான ராணுவ உபகரணங்கள் வழங்க முடிவு செய்திருக்கிறது.
மெக்சிகோ நாட்டின் பிரபல போதைப்பொருள் கடத்தல் தலைவன் "எல் சாப்போ" குஸ்மானின் மகனைக் கைது செய்யும் முயற்சியில் 10 காவல் அதிகாரிகள் உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர்.
நேபாளம் நாட்டின் சல்ஜன்டி - தோர்பட்டான் பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சிக்கி 6 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் ராணுவ பயிற்சியின் போது பிரிட்டன் இளவரசர் ஹாரி, 25 பேரைக் கொலை செய்ததுக்கு தாலிபன்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
மாலியின் ராணுவத் தலைவர் கோய்டா, கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த 49 ஐவரி கோஸ்ட் வீரர்களுக்கு மன்னிப்பு வழங்கினார்.
2020-ல் அமெரிக்காவில் நடந்த தாக்குதலில் மக்களைக் காக்கச் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.
ஃபைசர் நிறுவனத்திடம் கோவிட் தொற்றுக்கான மருந்தைத் தயாரிக்கும் உரிமம் பெறச் சீனா பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.
உக்ரைனை கைப்பற்றும் முயற்சி இன்னும் புதினிடம் மாறவில்லை, ஆனால் ரஷ்ய படைகளிடம் உள்ள ராணுவ தளவாடங்கள், வீரர்கள் எல்லாம் பலவீனம் அடைந்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.