க.ஶ்ரீநிதி
பிரேசிலின் முன்னாள் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.
தாய்லாந்து இளவரசிக்கு இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பால் மூன்று வார காலத்துக்கும் மேலாகச் சுயநினைவை இழந்திருக்கிறார்.
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெடன்யாஹூ (Benjamin Netanyahu) தலைமையிலான புதிய அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெக்ஸிகோவில் மெட்ரோ ரயிலில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 57 பேர் பலத்த காயமடைந்தனர்.
`ஏவுகணைத் தாக்குதலில் 600 ராணுவ வீரர்களைக் கொன்றோம்' என ரஷ்யா அறிவித்ததை, உக்ரைன் மறுத்திருக்கிறது.
செனகல் நாட்டில், பேருந்து விபத்தில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். 100 பேர் படுகாயமடைந்தனர்.
பசிபிக் தீவில் ஒன்றான வனுவாட்டு (Vanuatu) நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0-ஆகப் பதிவாகியிருக்கிறது.
பாகிஸ்தானில், அரசால் மானிய விலையில் வழங்கப்பட்ட மாவை வாங்க மக்கள் கூட்டமாகச் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
இந்தோனேசியாவில் மெராபி எரிமலை (Mount Merapi) வெடித்தது. இதிலிருந்து வந்த சாம்பல் 300 மீட்டர் வரை பரவியது.
பிரேசிலில் போல்சனாரோ ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவின் கால்பந்து வீராங்கனையான கீர்ஸ்டென் ஹெனிங், பயிற்சியாளருக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததில் ஒரு லட்சம் டாலர் வென்றிருக்கிறார். வீராங்கனை மண்டியிட மறுத்ததற்காக, பயிற்சியாளர் களத்தில் இறக்கவில்லை என்று வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது