சு.உ.சவ்பாக்யதா
நியூயார்க் நகரில் 7000 -க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஜெனிவாவில் நடந்த ஐ.நா மாநாட்டில், வெள்ள பாதிப்புக்கு உதவியாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 8 பில்லியன் டாலர்கள் நிதியுதவி கோரியிருக்கிறார்.
பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய காரணத்துக்காக சிங்கப்பூரில் வாழ்ந்த பிரேமா என்ற இந்திய வம்சாவளிக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இரானில் போராட்டம் செய்பவர்களைத் தூக்கிலிடுவது "மனிதநேயத்துக்கும், இறைவனுக்கும் எதிரான செயல்" என்று போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
வெளிநாட்டிலிருந்து வரும் பார்வையாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி சான்றிதழ் கட்டுப்பாடுகளை முற்றிலுமாக தாய்லாந்து அரசு தளர்த்தியிருக்கிறது.
ஒரு நேர்காணலில் இளவரசர் ஹாரி, தற்போதைய துணை ராணியான கேமில்லாவை 'வில்லன்' என்று கூறியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இரானில் காவலர்களைக் கொன்றதற்காக மேலும் மூன்று பேர் தூக்கிலிடப்பட்டனர்.
முன்னால் பிரேசில் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் நடத்தியத் தாக்குதல்களை ஆதரிக்கும் வீடியோக்களை அகற்றப்போவதாக மெட்டா மற்றும் யூடியூப் அறிவித்திருக்கிறது.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் 7.6 ரிக்டர் அளவில் பதிவுசெய்யப்பட்டது.
பெரு நாட்டில் அந்நாட்டு அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் இதுவரை 17 பேர் கொல்லப்பட்டனர்.