சீசர் விருதுகள்; பிரான்ஸ் முக்கிய முடிவு | செனிகல் எம்.பி-க்களுக்கு சிறைத் தண்டனை - உலகச் செய்திகள்

க.ஶ்ரீநிதி

பிரான்ஸின் ஆஸ்கார் விருதுக்கு ஒப்பான சீசர் விருதுகளில் 2023-ம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குத் தடைவிதிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் சொத்து கட்டுப்பாடுகளை எளிதாக்கியிருக்கிறது அந்த நாட்டு அரசு.

இரான் செஸ் வீராங்கனையான சாரா காதெம், ஹிஜாப் அணியாமல் சர்வதேசப் போட்டியில் பங்கேற்பதற்காக கடும் எதிர்ப்புகளைச் சந்தித்துவருகிறார்.

பின்லாந்தின் பாதுகாப்புத் துறை அமைச்சரான ஆன்டி கைக்கோனென் இரண்டு மாதங்கள் விடுப்பில் செல்வதால், அந்த நாட்டில் தற்காலிக அமைச்சர் நியமிக்கப்படவிருக்கிறார்.

செனிகல் நாடாளுமன்றத்தில் இரண்டு ஆண் எம்.பி-க்கள் ஒரு கர்ப்பிணி எம்.பி-யைத் தாக்கி எட்டி உதைத்ததால், அவர்களுக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

பிரேசில் அதிபர் லூலா, மறைந்த கால்பந்து வீரர் பீலேவுக்குத் தன் இறுதி மரியாதையைச் செலுத்தினார்.

Andre Penner

ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன், தங்கள் நாடு பிரான்ஸிடம் அணு ஆயுத உலைகளை வாங்க முற்படும் என்று கூறியிருக்கிறார்.

Francois Mori

ஜெர்மனியில் 4,000 பேரை மாஸ்க் அணியத் தேவையில்லை என்று தவறாக வழிநடத்திய மருத்துவர் சிறை பிடிக்கப்பட்டார்.

Hiro Komae

பிரபல யூடியூப் நட்சத்திரம் கென் பிளாக் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.