சு.உ.சவ்பாக்யதா
இரானின் பெண்கள், சிறுமிகளின் உரிமைகளுக்கு எதிரான கொள்கைகளுக்காக, ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பிலிருந்து அந்த நாடு வெளியேற்றப்பட்டது.
அமீர் நஸ்ர்-அசாதானி என்ற 24 வயது இரான் நாட்டுக் கால்பந்து வீரருக்கு, அந்நாட்டுப் போராட்டங்களில் பங்கேற்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (Liberal Democratic Party ) வரிக் குழுவின் மூத்த அதிகாரிகள், முக்கிய வரிகளை உயர்த்தப்போவதாக அறிவித்திருக்கின்றனர்.
எத்தியோப்பியாவில் நடக்கும் வன்முறைகள், வெறுக்கத்தக்கப் பதிவுகளைப் மெட்டா பிளாட்ஃபார்ம்கள் பரப்ப உதவுவதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
சவுதி அரேபியாவில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கல்வி நிறுவனங்களில் சீன மொழி மற்றும் இலக்கியம் விரைவில் கற்பிக்கத் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தெற்கு சூடனின் மேல் நைல் மாநிலத்தில் மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் மாதம் முதல் 166 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 20,000-க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்திருப்பதாகவும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் கமிஷனர் அறிவித்திருக்கிறார்.
அடுத்த நிதியாண்டில் கூடுதலாக 64,716 ஹெச்2பி விசாக்களை வழங்க அமெரிக்கா முடிவெடுத்திருக்கிறது. ஹெ2பி என்பது அமெரிக்காவில் தங்கிப் பணியாற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த உடல் உழைப்பு சாா்ந்த தொழிலாளா்களுக்கு வழங்கப்படுவதாகும்.
அமெரிக்க ஃப்ரீஸ்டைல் ஹிப்-ஹாப் நடனக் கலைஞரும், நடிகருமான ஸ்டீபன் லாரல் "ட்விட்ச்" பாஸ் (Stephen Laurel "Twitch") தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 40.
சீனா மருத்துவமனைகளில் 14,000 காய்ச்சல் கிளினிக்குகளை திறந்திருப்பதாக தேசிய சுகாதார ஆணையத்தின் மூத்த அதிகாரி ஜியாவோ யாஹுய் தெரிவித்தார்.