க.ஶ்ரீநிதி
நியூயார்க்கில் செல்லப்பிராணிகளை விற்பதற்குத் தடைவிதிக்கும் சட்டத்தில் கவர்னர் கேத்தி ஹோச்சுல் (Kathy Hochul) கையெழுத்திட்டார். 2024 டிசம்பர் முதல் அமலுக்கு வரும் இந்தச் சட்டத்தால், செல்லப்பிராணிகளைப் பாதுகாக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி தொடர்பான ஆவணங்களை வெளியிட்டிருக்கிறது அந்த நாட்டின் தேசிய ஆவணக்காப்பகம்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் அந்த நிறுவனத்தின் 3.6 பில்லியன் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்திருக்கிறார்.
சோனி நிறுவனம், ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் ஸ்மார்ட்போன் இமேஜ் சென்சார்களை உருவாக்கும் புதிய தொழிற்சாலையை நிறுவுவதற்குப் பல பில்லியன் டாலரை முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறது.
ரஷ்யா மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருப்பதாக உக்ரைன் தெரிவித்திருக்கிறது.
பிலடெல்பியாவில் (Philadelphia) அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால், பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் 30-வது தலைவராக க்ளாடின் கே (Claudine Gay) தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல் ஆப்பிரிக்க - அமெரிக்கப் பெண்.
ஸ்லோவாக்கியா அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வி அடைந்தது. 150 உறுப்பினர்களில் 78 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்ததால், அரசு கவிழ்ந்திருக்கிறது.
லண்டனில் ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி செவிலியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கால்பந்து உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் போர்சுக்கல் அதிர்ச்சித் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஃபெர்னாண்டோ சான்டோஸ் (Fernando Santos) விலகினார்.