க.ஶ்ரீநிதி
கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பிரான்ஸ் அணிக்கு, அந்த நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈகுவேடார் நாட்டின் அதிபர் குலிர்மோ ராசோவை (Guillermo Razo) சந்தித்தார். புலம்பெயர்ந்தோர் விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
36 பயணிகளுடன் சென்ற ஹவாயன் விமானத்தில் பயங்கர காற்றுக் கொந்தளிப்பு (Air Turbulence) ஏற்பட்டது. இதனால் அதில் பயணம் செய்த 11 பேர் பலத்த காயமடைந்திருக்கின்றனர்.
பெரு நாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் இறந்தவர்களின் இறுதிச்சடங்கில், அந்நாட்டின் அதிபர் டினா பொலுஆர்ட் (Dina Boluarte) பங்கேற்றார்.
``சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை உலக நாடுகள் கருத்தில் கொள்ள வேண்டும். சீனாவின் பொருளாதாரம் இதனால் பாதிக்கப்படும்" என அமெரிக்கா கருத்து தெரிவித்திருக்கிறது.
பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் (Harvey Weinstein) மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்கில், அவர் குற்றவாளி என லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே, வரலாற்றில் டச் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட அடிமைத்தனத்துக்கு தற்போது மன்னிப்பு கோரினார்.
மியான்மரிலிருந்து இந்தோனேசியாவுக்குச் செல்ல முயன்ற 104 ரோஹிங்யா அகதிகளை இலங்கை ராணுவம் பத்திரமாக மீட்டது.
தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமஃபோசா (Cyril Ramaphosa ) மீண்டும் ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஊழலில் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் அரிதான அமேசான் பவளப்பாறைகள் எண்ணெய் உற்பத்திக்குத் தோண்டப்படுவதால் அழியும் அபாயத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.