இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்| கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துக்கு அல்சைமர் - உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

சு.உ.சவ்பாக்யதா

அமெரிக்காவில் LGBTQ இரவு கிளப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டு, 18 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் சந்தேகத்துக்குரிய நபர் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

Scott Strazzante

காலநிலை மாற்றப் போராளிகள் இங்கிலாந்தின் உணவு முறையை மாற்றியமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒரு கட்டமாக லண்டனிலுள்ள ஜார்டன் ராம்ஸே-வின் உணவகம் ஒன்றில் அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டனர்.

ஜப்பானின் உள்துறை அமைச்சர் மினோரு டெராடா பதவியேற்ற ஒரு மாதத்துக்குள் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஜப்பானில் ஒரே மாதத்தில் மூன்றாவது அமைச்சர் பதவி விலகியிருக்கிறார்.

îˆçËèÉéq

ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துக்கு அல்சைமர் எனப்படும் ஞாபகமறதி நோய்க்கான மரபணுக்கள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் சில காலத்துக்கு நடிப்பதிலிருந்து ஓய்வெடுக்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

Andy Kropa

இரானின் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் மேலும் மூவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தற்போது இறப்பு எண்ணிக்கை 378-ஆக உயர்ந்திருக்கிறது.

Vahid Salemi

இங்கிலாந்து பிரதமரான பிறகு ரிஷி சுனக் முதன்முறையாக உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்து 50 மில்லியன் யூரோ நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்தார்.

2022 FIFA உலகக் கோப்பை தொடக்க விழாவையொட்டி இஸ்ரேலுக்கும் கத்தாருக்கும் இடையிலான முதல் நேரடி வணிக விமானம் தோஹாவில் தரையிறங்கியது.

Darko Bandic

நைஜீரியாவைச் சேர்ந்த டீன் ஏஜ் காலநிலை மாற்ற ஆர்வலர்கள், ஃபேஷன் ராம்ப் வாக் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்திவருகிறார்கள். குப்பைகளை மறுசுழற்சி செய்து ஃபேஷன் ஷோ ஆடைகளை வடிவமைத்து 'டிராஷன் ஷோ' (Trashion show) நடத்திவருகின்றனர்.

Sunday Alamba

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

BASARNAS