சீனா: 80% மக்களுக்கு கொரோனா எனத் தகவல்| பணிநீக்கம் குறித்து சுந்தர் பிச்சை வருத்தம்- உலகச் செய்திகள்

க.ஶ்ரீநிதி

சீனாவில் 80% மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், இதுவரை 60,000 பேர் இந்தத் தொற்றால் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அர்ஜென்டினாவில் நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், அர்ஜென்டினா, பராகுவே பகுதிகளில் உணரப்பட்டது.

நிலநடுக்க அதிர்வு பதிவு

வடக்கு புர்கினா ஃபாசோவில் போராட்ட படைகளால் கடத்தப்பட்ட குழந்தைகள், பெண்கள் உட்பட 66 பேர் பாதுகாப்புப் படைகளால் மீட்கப்பட்டனர்.

மோசமான உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்வதால், தட்டையான முகம் கொண்ட நாய்கள், காதுகளை மடக்கிய பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பதை தடைசெய்ய நெதர்லாந்து அரசுத் திட்டம்.

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், 12,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யத் திட்டம். இந்த முடிவுக்கு பணியாளர்களிடம் சுந்தர் பிச்சை வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

சீனா, கொரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பல லட்சம் மக்கள் கொண்டாடும் லூனார் இயர் (சந்திர ஆண்டு) பிறந்தது. உறவினர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறி மக்கள் மகிழ்ச்சி.

Li Xueren

வெஸ்ட் பாங்க் பகுதியில் இஸ்ரேலியப் படைகளால் மேலும் ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார். இதுவரை 18 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

Mahmoud Illean

உசைன் போல்ட் தனது சேமிப்பை வைத்திருந்த நிதி மேலாண்மை நிறுவனம் மீது மோசடிப் புகார். இது தொடர்பாக விசாரிக்க ஜமைக்கா அரசு உத்தரவு.

உசைன் போல்ட்

50,000 ஆண்டுகள் கழித்து பூமிக்கு அருகில் வரும் பச்சை வண்ண வால் நட்சத்திரம். பிப்ரவரி 2-ல் பூமிக்கு மிக அருகில் வரும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

பிரேசில் அதிபர் லூலா டா சில்வா அந்நாட்டின் ராணுவ தலைமை அதிகாரி ஜூலியோ சீசர் டே அரூடாவை பணிநீக்கம் செய்திருக்கிறார்.