சு.உ.சவ்பாக்யதா
தெற்கு கலிஃபோர்னியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் இறந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய 72 வயது நபரும், ஒரு வாகனத்தில் இறந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் பாகிஸ்தானில் 42 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக, அந்த நாட்டின் அமைச்சர் முர்தாசா ஜாவேத் அப்பாசி கூறியிருக்கிறார்.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எஃப்.டி.ஏ), இந்த ஆண்டு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13,000 பேர் கோவிட் நோய்த்தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கனடா அரசு பழங்குடி சமூக மக்களுக்கு, அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள், துன்புறுத்தல்களுக்கு இழப்பீடாக இரண்டு மில்லியன் டாலர் வழங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கிணங்க, அந்த நாட்டின் உள்துறை அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார்.
கோவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு சீனாவிலிருந்து வந்த முதல் சுற்றுலாப் பயணிகள் விமானத்தை பாலி சிறப்பாக வரவேற்றது.
இங்கிலாந்தின் முன்னாள் அதிபர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவுக்குப் பயணம் மேற்கொண்டார்.
மேற்கு நாடுகளில் நிலவும் பதற்றங்களால், இரானின் பணமதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.
உக்ரைனில் போருக்கு மத்தியில், பிரிந்திருந்த பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் புதிதாக தங்கள் கூட்டணியைப் புதுப்பித்திருக்கின்றன.
ஜப்பானின் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, நாட்டில் குறைந்துவரும் பிறப்பு விகிதத்தைச் சமாளிக்க அவசர நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக உறுதியளித்திருக்கிறார்.