`டொனால்டு ட்ரம்ப் மோசடி வழக்கு முதல் ஐபோன் ஷோரூமில் புகுந்த கார் வரை'- உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

சு.உ.சவ்பாக்யதா

அர்ஜென்டினாவை வீழ்த்தி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றதையடுத்து, இன்றைய தினத்தை தேசிய விடுமுறையாக அறிவித்தது சவுதி அரசு.

Andre Penner

குரங்கம்மைக்கு எதிரான தடுப்பூசியின் ஒரு டோஸ், வைரஸுக்கு எதிராக 78 சதவிகித பாதுகாப்பை வழங்குகிறது என்று இங்கிலாந்து வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

மசாசூசெட்ஸின் ஹிங்ஹாமிலுள்ள ஆப்பிள் ஷோரூம் மீது SUV கார் மோதியதில் 16 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

Steven Senne

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. அதனால் அங்கு பூங்காக்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களை திறக்க தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளை அமெரிக்கா கண்டித்திருக்கும் நிலையில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரி அமெரிக்காவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

朝鮮通信社

டொனால்ட் ட்ரம்ப், அவரின் மூன்று குழ்ந்தைகள் மீதான மோசடி வழக்கு அடுத்த ஆண்டு விசாரணைக்கு வரும் என்று நீதிபதி டூஸ்டா தீர்ப்பளித்தார்.

டொனால்ட் ட்ரம்ப்

நேபால் பிரதமரான ஷேர் பகதூர் டியூபா, தனது சொந்த மாவட்டமான தன்குடாவிலிருந்து தொடர்ந்து 7-வது முறையாகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐ.நா-வின் உயரிய சுற்றுச்சூழல் விருதான `சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்' (Champions of the Earth) விருதை இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் பூர்ணிமா தேவி பர்மன் பெற்றிருக்கிறார்.

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் மூன்று பெரிய பங்களிப்பாளர்களான பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி, அடுத்த தலைமுறை ஏரியன் 6 மற்றும் வேகா-சி ராக்கெட் ஏவுகணை அமைப்புகளின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்தன.

சீனாவில் ஐபோன் தொழிற்சாலையில் நடந்த வன்முறை தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது