சு.உ.சவ்பாக்யதா
சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நேபாள சிறையிலிருந்து விடுதலையானார்.
சீனாவின் ஒரு நாள் கோவிட் தொற்று பரவல் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆடைக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றாததால்தான் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பதாகத் தாலிபன் உயர்கல்வி அமைச்சர் நிதா முகமது தெரிவித்திருக்கிறார்.
நாசாவின் இன்சைடு மார்ஸ் லேண்டர் நான்கு வருட ஆராய்ச்சிக்குப் பிறகு தனது பணியை நிறைவு செய்தது.
இயேசுவின் பேறுகாலப் பணியாளர் 'சலோம்' உடன் தொடர்புடைய ஒரு பழங்கால கல்லறை, ஜெருசலேமின் தென்மேற்கில் உள்ள மலைகளில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டு, ஆராயப்பட்டு வருகிறது.
பனிப்புயலினால் அமெரிக்காவில் சுமார் 2,000 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. விடுமுறை நாள்கள் என்பதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
யூட்யூபில் பிரபலமான 'Mr Beast' என்ற சேனலின் உரிமையாளர் ஜிம்மி, "நான் ட்விட்டரின் CEO ஆகலாமா?" என்று ட்வீட் செய்ய, "இது கேள்விக்கு அப்பாற்பட்டது அல்ல" என்று எலான் மஸ்க் பதிலளித்திருக்கிறார்.
16 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்த மருத்துவ மேற்பார்வையும் இல்லாமல் சட்டபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட பாலினத்தை மாற்றம் செய்யலாம் என்ற சட்டம் ஸ்பெயின் நாட்டில் நிறைவேற்றப்பட்டது.
மியான்மாரில் வன்முறையை உடனடியாக நிறுத்தக் கோரும் வரைவுத் தீர்மானத்திற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வாக்களிக்கவில்லை.