சு.உ.சவ்பாக்யதா
மேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் ஏற்பட்ட கோர தீ விபத்துக்கு எதிராக, சீனாவின் பல நகரங்களில் கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஸ்பேஸ் எக்ஸ் தற்போது தக்காளி விதைகளைச் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பிவைத்திருக்கிறது.
மத்திய அமெரிக்காவிலுள்ள ஹோன்டுராஸ் பணம் பறித்தல் போன்ற குற்றங்களை எதிர்த்துப் போராட அவசரக்கால நிலையை அறிவித்த இரண்டாவது நாடாக மாறியிருக்கிறது.
கத்தார் உலகக் கோப்பையில் முகமூடி இல்லாத ரசிகர்களின் நெருக்கமான காட்சிகள் சீனாவில் தடைசெய்யப்பட்டிருக்கின்றன.
வெளிநாட்டவர்கள் ரஷ்ய வாடகைத் தாய்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சட்டத்தை ரஷ்யா விரைவில் ஏற்றுக்கொள்ளும் என்று அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் வியாசெஸ்லாவ் வோலோடின் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை உலகக் கோப்பையில் பெல்ஜியத்தை மொராக்கோ 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதையடுத்து பெல்ஜியம், டச்சு நகரங்களில் கலவரங்கள் மூண்டன.
சர்வதேச தெர்மோநியூக்ளியர் எக்ஸ்பெரிமென்டல் ரியாக்டர் (ITER) எனப்படும் உலகின் மிகப்பெரிய `செயற்கை சூரியன்' தயாரிக்கும் பணியை முடித்தது சீனா.
ஹவாயில் உலகின் மிகப்பெரிய எரிமலை தற்போது வெடிக்கத் தொடங்கியிருப்பதால், அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.