வெளியேறிய ட்ரம்ப் முதல் `அனைவருக்குமான அதிபர்’ பைடன் வரை..!

பிரேம் குமார் எஸ்.கே.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்க இருந்த நிலையில், முன்னதாகவே வெள்ளை மாளிகையிலிருந்து தன் குடும்பத்துடன் வெளியேறினார் ட்ரம்ப்!

`எந்த அமெரிக்க அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன். புதிய அரசு வெற்றிபெற வாழ்த்துகிறேன்!’ - ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் மிச்சேல் ஒபாமா!

அமெரிக்க கேப்பிடலில் ஜோ பைடன், கமலா ஹாரிஸ்!

கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து சொன்ன ஒபாமா!

பொதுவாக லட்சம் பேர் கூடும் அதிபர் பதவியேற்பு விழா கொரோனா அச்சம் காரணமாக சுமார் 1,000 பேருடன் மட்டுமே நடந்தது!

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகப் பதவியேற்றார் கமலா ஹாரிஸ்!

அமெரிக்காவின் 46-வது அதிபரானார் ஜோ பைடன். அவருக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்!

`நான் அனைத்து அமெரிக்கர்களுக்கும் அதிபராக இருப்பேன். என்னை ஆதரிக்காதவர்களுக்காக நான் கடுமையாகப் போராடுவேன்’ - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர், துணை அதிபருக்கான அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்குகள் பைடனுக்கும், கமலா ஹாரிஸுக்கும் வழங்கப்பட்டன!