திமுக-வின் ஓராண்டு ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!

சி. அர்ச்சுணன்

2021, ஆகஸ்ட் 28, வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.

இந்திய குடியுரிமை திருத்தச்சட்டம்(சிஏஏ) 2019- ஐ ரத்து செய்யக்கோரி, 2021 செப்டம்பர் 8-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2021, செப்டம்பர் 13 - சட்டப்பேரவையில், நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம். 2022, பிப்ரவரி 3, மசோதாவை ஆளுநர் திருப்பியனுப்பினார்.

பிப்ரவரி 8-ஆம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

மேக்கேதாட்டூவில் அணைக் கட்டும், கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்து, மார்ச் 21-ல் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இளநிலை பட்டப்படிப்புகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை(CUET) எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசின் கீழ் செயல்படும் 13 பல்கலைக்கழகங்களில், துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் வகையிலான சட்ட மசோதா, சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானமாக நிறைவேற்றம்.

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தரை, முதலமைச்சரே நியமிக்கும் அதிகாரத்துக்கான திருத்த சட்ட மசோதாவை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.

இலங்கை மக்களுக்கு உதவ, மத்திய அரசின் அனுமதி கோரி சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டது.