ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணைய விசாரணையின் ஹைலைட்ஸ்!

சி. அர்ச்சுணன்

2016, டிசம்பர் 5-ஆம் தேதி, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா உயிரிழந்தார்.

2017, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைத்தது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு, 2019 ஏப்ரல் 26-ம் தேதி உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது.

2022 மார்ச், கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டது.

முதற்கட்ட விசாரணை 2022 மார்ச் 7 - ``2016-ல் ஜெயலலிதா, முதலமைச்சராகப் பதவியேற்கச் செல்லும் முந்தைய நாளில் தலைச்சுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்க முடியாத சூழலில் இருந்தார் - அப்போலோ மருத்துவர் பாபு மனோகர்

2022, மார்ச் 8 - ``2016 டிசம்பர் 4-ல் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது" - எய்ம்ஸ் மருத்துவர் மதன்குமார்

விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா அண்ணன் மனைவி இளவரசிக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்.

2022, மார்ச் 21 - ``அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது சசிகலா மட்டுமே உடன் இருந்து பார்த்துக்கொண்டார். 75 நாளில் ஓரிரு முறை மட்டுமே ஜெயலலிதாவை நான் பார்த்திருக்கிறேன்" - இளவரசி

2022, மார்ச் 21 - ``ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டன, எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரம் எனக்குத் தெரியாது" - ஓ.பி.எஸ்

2022, மார்ச் 22 - ``ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்தச் சந்தேகமும் இல்லை, பொதுமக்களின் கருத்து வலுத்ததால்தான், நான் இந்தக் கோரிக்கையை விடுத்தேன்" - ஓ.பி.எஸ்

ஈ.ஜெ.நந்தகுமார்

2022 ஏப்ரல் 26 - விசாரணை நிறைவடைந்ததாக, ஆறுமுகசாமி ஆணையம் அறிவிப்பு!