சென்னை பல்கலைக்கழக 164-வது பட்டமளிப்பு விழா: முதல்வர், ஆளுநர் ஸ்பீச் ஹைலைட்ஸ்!

VM மன்சூர் கைரி

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் தமிழக ஆளுநர் ரவி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

```வேலைகள் இருக்கின்றன... ஆனால், திறன் குறைவாக இருக்கிறது. இதனைச் சரி செய்யவே `நான் முதல்வன் திட்டம்' உருவாக்கப்பட்டது." - முதல்வர் ஸ்டாலின்

``மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 1,000 வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது." - முதல்வர் ஸ்டாலின்

``பெருந்தலைவர் காமராஜர் காலம் பள்ளியின் பொற்காலம் என்பதைப்போல, முத்தமிழறிஞர் கலைஞரின் காலம் கல்லூரியின் பொற்காலம் என்பதைப்போல, எனது ஆட்சியின் காலம் உயர்கல்வியின் பொற்காலமாக வேண்டும்." - முதல்வர் ஸ்டாலின்

``தமிழ்நாட்டில் நிதி பற்றாக்குறை பிரச்னை இருந்தாலும் மாணவர்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நல்ல முயற்சிக்கு உதவியாக இருந்துவரும் தமிழக ஆளுநருக்கு என்னுடைய நன்றி." - முதல்வர் ஸ்டாலின்

``மிகப் பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி அடிக்கடி கூறி வருகிறார். தமிழ் மொழியின் இலக்கணமும், இலக்கியமும், பாரம்பர்யமிக்கது." - ஆளுநர் ஆர்.என்.ரவி

``கல்வி, தொழில், மருத்துவம் ஆகிய துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது." - ஆளுநர் ஆர்.என்.ரவி

``தமிழர்கள் பலஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருவாக்கி பயன்படுத்தி இருக்கின்றனர் என்பதை தொல்லியல் ஆய்வுகள் உறுதிபடுத்தியிருப்பது பெருமையாக இருக்கிறது." - ஆளுநர் ஆர்.என்.ரவி

``தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலம். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் வர வேண்டும். தமிழ் மொழியை தமிழ்நாடு தாண்டி பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டிய நேரமிது." - ஆளுநர் ஆர்.என்.ரவி

``மற்ற மாநிலங்களில் தமிழ் மொழியை மூன்றாவது மொழியாகச் சேர்ப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும். தமிழ்மொழி நாடு முழுவதும் பரப்பப்பட வேண்டும்." - ஆளுநர் ஆர்.என்.ரவி