தற்கொலையில் தமிழ்நாடு 2-ம் இடம்; பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரம் டெல்லி! - NCRB ரிப்போர்ட்

சாலினி சுப்ரமணியம்

நாடு முழுவதும் கடந்த ஆண்டு 1,64,033 தற்கொலை சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இதில் அதிக தற்கொலைகள் நடைபெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் சுமாா் 4,22,659 விபத்துகள் பதிவாகியிருக்கின்றன. விபத்துகளில் பலியானோா் எண்ணிக்கையில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிராக 1,49,404 குற்றங்கள் நடந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக 6,064 குற்றங்கள் நடந்திருக்கின்றன.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 15.3% அதிகரித்திருக்கின்றன. டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக உள்ளது. 2021-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக 8,501 குற்றங்கள் நடந்திருக்கின்றன.

கடந்த ஆண்டு நாட்டில் மொத்தம் 639 கள்ள நோட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.

கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.