`பகத் சிங் முதல் சுபாஷ் சந்திரபோஸ் வரை!' - சுதந்திர வேட்கையை அள்ளித்தெளித்த தலைவர்களின் வார்த்தைகள்

VM மன்சூர் கைரி

``என்னுடைய மதம் உண்மை, அகிம்சையை அடிப்படையாகக்கொண்டது. உண்மையே என் கடவுள்." - மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி

``நாட்டின் குடியுரிமை என்பது நாட்டின் சேவையில் இருக்கிறது." - ஜவஹர்லால் நேரு

நேரு

"புரட்சி ஆசை நம் உள்ளத்தில் இருக்கிறது. இனி எதிரிக்கு எவ்வளவு பலம் இருக்கிறது என்று பார்ப்போம்." - பிஸ்மில் அஜிமபதி

"அவர்கள் என்னைக் கொல்லலாம், ஆனால் அவர்களால் என் சிந்தனைகளைக் கொல்ல முடியாது." - பகத் சிங்

"சுதந்திரம் என் பிறப்புரிமை. அதை நான் பெற்றே தீருவேன்." - பாலகங்காதர திலகர்

"சங்கிலி இல்லாவிட்டாலும் மனம் சுதந்திரமாக இல்லாத ஒருவன் அடிமையே... மனச் சுதந்திரம்தான் ஒருவர் இருப்பதற்கான ஆதாரம்." - டாக்டர் அம்பேத்கர்

"நான் ஓர் இந்தியன். எனக்கு இந்த நாட்டில் எல்லா உரிமைகளும் இருக்கின்றன. அதேபோல சில கடமைகளும் இருக்கின்றன என்பதை ஒவ்வோர் இந்தியக் குடிமகனும் நினைவில்கொள்ள வேண்டும்." - சர்தார் வல்லபாய் படேல்

"பிறந்த குழந்தைகூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்கிறது." - சுபாஷ் சந்திர போஸ்

"ஒரு நாட்டின் மகத்துவம் தாய்மார்களை ஊக்குவிக்கும் அன்பு, தியாகத்தின் அழியாத கொள்கைகளில் இருக்கிறது." - சரோஜினி நாயுடு

"நாம் ஒன்றுபடாவிட்டால் நமக்கு வாழ்வு இல்லை... நாம் ஒன்றுபட்டால் நமக்கு இணை இங்கு வேறு யாருமில்லை." - காயிதே மில்லத்