திமுக ஆட்சியில் அதிகம் ட்ரெண்டிங்கான வார்த்தைகள்!

சி. அர்ச்சுணன்

``ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லாதவை". நீட் விலக்கு மசோதா திருப்பியனுப்பட்டதையடுத்து, அண்ணாவின் இந்த வாக்கியம் அதிகளவில் ட்ரெண்டிங் ஆனது.

ஆளுநர் ஆர்.என்.ரவி

``ஒன்றிய அரசு!" - முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டிருந்தார். `ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை' - ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

``திராவிட மாடல்!" - 2021-ல் திமுக ஆட்சியமைத்த பிறகு, பெரும்பாலான கூட்டங்களில் திமுக ஆட்சியை திராவிட மாடல் என்று ஸ்டாலின் கூறிவந்தார்.

ஸ்டாலின்

``சமூக நீதி" - முதல்வரானது முதலே, இது சமூக நீதிக்கான அரசு, சமத்துவத்துக்கான அரசு என்ற வாக்கியங்களை அதிகமாக ஸ்டாலின் பயன்படுத்தினார்.

முதல்வர் ஸ்டாலின்

``முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" - முதல்வர் பதவியேற்பு விழாவில், ஸ்டாலின் கூறிய இந்த வார்த்தை சமூக வலைதளங்களில் மிகவும் ட்ரெண்ட் ஆனது.

தமிழக முதல்வர்

``மின்வெட்டும் அணிலும்!" - மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, மின்கம்பிகளில் அணில்கள் ஓடுவதால், மின்கம்பிகள் பழுதாகி மின்வெட்டு ஏற்படுகிறது என, அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.

செந்தில் பாலாஜி