சி. அர்ச்சுணன்
2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் சில...
*புதிய வருமான வரி முறை: ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை.
*பசுமை வளர்ச்சிக்கு 19,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
*நாடு முழுவதும் இயந்திரங்களால் கழிவுகள் அகற்றும் முறை 100% நடைமுறைபடுத்தப்படும்.
*பழங்குடியின குழந்தைகளுக்கு 'ஏகலைவா' கல்வித்திட்டம் தொடங்கப்படும். 38,800 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
*வறட்சி சமாளிப்பு, குடிநீர் வசதி, விவசாயிகளுக்கு ரூ.5,300 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
எதிர்க்கட்சியினர் கருத்து:-
மல்லிகார்ஜுன கார்கே: ``அடுத்தடுத்து வரக்கூடிய 3, 4 சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில்கொண்டு இந்த பட்ஜெட்டை மத்திய அரசு கொடுத்திருக்கிறது. இதில் ஏழைகளுக்கு எதுவுமில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏதும் இல்லை."
மம்தா பானர்ஜி: ``இந்த பட்ஜெட் முற்றிலும் சந்தர்ப்பவாதமானது, ஏழைகளுக்கு எதிரானது. இது ஒரு இருண்ட பட்ஜெட். எனக்கு ஓர் அரை மணி நேரம் கொடுங்கள், ஏழைகளுக்கான பட்ஜெட்டை எவ்வாறு தயாரிப்பது என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன்."
அரவிந்த் கெஜ்ரிவால்: ``இந்த பட்ஜெட் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும். வேலையில்லா திண்டாட்டத்தை அகற்ற உறுதியான திட்டம் எதுவும் இல்லை. கல்விக்கான பட்ஜெட்டை 2.64 சதவிகிதத்திலிருந்து 2.5 சதவிதமாகக் குறைத்தது துரதிஷ்டவசமானது."
மெகபூபா முஃப்தி: ``மக்கள் பயன்பெறுவதற்கு பதிலாக, நலத்திட்டங்கள், மானியங்கள் அகற்றப்படுகின்றன. இந்த பட்ஜெட்டால், நாட்டில் வறுமைக்கோட்டுக்கு மேலே உயர்ந்தவர்கள் மீண்டும் கீழே விழும் நிலை உள்ளது."
ப.சிதம்பரம்: ``இந்த பட்ஜெட் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைத்த ஒரு `மோசமான' பட்ஜெட்."
காங்கிரஸ் எம்.பி கே.சுரேஷ்: ``அதானியின் நலன்களைச் சார்ந்து இந்த பட்ஜெட் போடப்பட்டிருக்கிறது. இதில், சாமான்யர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர். மொத்தத்தில் இந்த பட்ஜெட் அதானி, அம்பானி, குஜராத்துக்கானது."