இந்து-முஸ்லிம் கலவரம், புல்டோசர் பாலிடிக்ஸ் & எதிர்க்கட்சிகள் கமெண்ட்ஸ்!

சி. அர்ச்சுணன்

ரம்ஜான் பண்டிகையன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்து-முஸ்லிம் இடையே கலவரம். 97 பேருக்கு மேற்பட்டோர் கைது.

கர்நாடகாவில், அடுத்தடுத்த பள்ளிகளில் ஹிஜாப் தடை, இந்து கோயில்களில் முஸ்லிம் கடைகளுக்கு எதிர்ப்பு, ஹலால் விவகாரம்.

ராமநவமி, அனுமன் ஜெயந்தி பண்டிகையின்போது, ராஜஸ்தான், டெல்லி, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்து அமைப்பினர் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே மோதல்.

அனுமன் ஜெயந்தியன்று டெல்லி ஜஹாங்கிர்புரியில் நடந்த இந்து-முஸ்லிம் கலவரத்துக்குப் பிறகு, ஜஹாங்கிர்புரி பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி மாநகராட்சி உத்தரவு.

ஜஹாங்கிர்புரி ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை. இருப்பினும் தடையை மீறி சில கட்டடங்கள் புல்டோசர் கொண்டு அகற்றப்பட்டன.

``உள்துறை அமைச்சர்தான் இதுபோன்ற கலவரத்துக்குத் திட்டமிடுகிறார். உள்துறை அமைச்சரின் வீட்டை இடிக்க புல்டோசரை பயன்படுத்துங்கள்" - ஆத்மி எம்.பி ராகவ் சாதா

``இந்தியாவுக்கு புல்டோசர் அரசியல் தேவையில்லை. அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல்தான் தேவை" - ரமேஷ் சென்னிதலா(காங்கிரஸ்)

``இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தின் சின்னமாக புல்டோசர் மாறியுள்ளது" - மெகபூபா முஃப்தி (ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்)

``மத விழாக்கள் நாட்டில் வகுப்புவாத அரசியலுக்கான ஆயுதங்களாக மாறிவிட்டன. ஒரு கொடியின் பெயரால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்குமானால், அது நாட்டுக்கே கவலைக்குரிய விஷயம்" - பிருந்தா காரத்