``ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்குவேன்!”- சசிகலாவின் அரசியல் ரீ-என்ட்ரி

சி. அர்ச்சுணன்

2017, பிப்ரவரி 15, சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா.

2021, ஜனவரி 27-ல், விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தபோதே விடுதலை.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்கு பிறகு, 'போதும், போதும்... தோற்றது போதும், தலைமையேற்க வா தாயே' என தொண்டர்களின் தொடர் போஸ்டர் விளம்பரங்கள்!

தென்மாவட்ட சுற்றுப்பயணம் மார்ச், 2022: ``அதிமுக ஒரே குடும்பம், பிள்ளைகளை நிச்சயம் சந்திப்பேன்” - சசிகலா

தென்மாவட்ட சுற்றுப்பயணத்துக்குப் பிறகு சசிகலா அறிக்கை: ``கழக தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், முழக்கங்கள் நிச்சயம் நிறைவேறும்.”

2022, மார்ச் - ``தனிப்பட்ட முறையில் சின்னம்மா மீது மதிப்பும், மரியாதையும் உள்ளது” - ஓ.பி.எஸ்

2022, ஏப்ரல் - ``சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும்” - உயர் நீதிமன்றம்

2022, ஏப்ரல் - ``தோல்விகளிலிருந்து அதிமுகவை மீட்டு, ஆட்சியில் அமரவைப்பதே என் கடமை. அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது” - சசிகலா

சசிகலா

2022, மே 7 - ``அரசியல் பயணத்தை விரைவில் தொடர்வேன். நான் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருந்ததோ அதே ஆட்சியை வழங்குவேன்”

சசிகலா